இனியாவால் பாக்யாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. கடைசியில் கோபிக்கு கிடைத்த வெற்றி.. கதையே மாறிப்போச்சி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பள்ளிக்கு அழைத்த இனியாவால் பாக்கியலட்சுமிக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
அமிர்தாவுக்கு போன் செய்து பாக்கியா ஆறுதலாக பேசுகிறார்.
பாக்கியாவிடம் உண்மையை மறைத்த இனியாவின் செயல் கடைசியில் பாக்யாவுக்கு தெரிந்து விட்டது இதனால் குடும்பத்திற்கு புது பிரச்சனை தொடங்க இருக்கிறது.

இக்கட்டான சூழ்நிலையில் இனியா
பாக்கியலட்சுமி செய்திகளின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் இனியாவிடம் ஹெட் மாஸ்டர், பேரன்ட்ஸ் கட்டாயமாக வரவேண்டும் அதுவும் இன்று மாலைக்குள் வந்து என்னை பார்க்காவிட்டால் டிசியை வாங்கிக் கொண்டு நீயே சென்று விடு என்று கூறியதால் அழுதபடியே இருக்கிறார். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அம்மாவிடம் சொல்லலாம் என்று முதலில் முடிவு எடுக்கிறார். பின்பு அம்மாவிடம் சொன்னால் அவர் திட்டுவார் என்று யோசித்து பயந்தபடியே ஆபீஸ் ரூமுக்கு சென்று கோபிக்கு போன் செய்து வர சொல்கிறார். கோபி இனியா போன் செய்ததும் பதறியபடி நான் இருக்கிறேன் நான் இப்போது வருகிறேன் என்று கூறுகிறார்.

கடைசி எச்சரிக்கை
அடுத்ததாக பள்ளிக்கு வந்த கோபி இனியாவிடம் ஆறுதலாக பேசுகிறார். என்ன நடந்தது என்று கூறுகிறார். இனியாகவும் பள்ளியில் அவருடைய தோழிகள் போன் கொண்டு வந்ததும் அப்போது அங்கே அவர்கள் எடுத்த போட்டோ வீடியோவை பார்த்துக் கொண்டிருந்ததை டீச்சர் பார்த்து விட்டதால் பிரச்சனை ஆகிவிட்டது என்பதையும் கூறுகிறார். இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா இதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டாமா பண்ணுகிறார்கள் என்று கோபியும் பேசிய படியே ஹெட் மாஸ்டர் ரூமுக்கு செல்கிறார். அங்கே ஹெட் மாஸ்டர் கடும் கோபத்தில் பேசி இதுதான் கடைசி வார்னிங் இனியும் இப்படி நடந்தால் டிசி தான் கொடுப்பேன் என்று எச்சரித்து அனுப்புகிறார்.

பாக்கியாவின் ஆறுதல்
வெளியே வந்த இனியா கோபிக்கு நன்றி கூறி கிளம்பி கிளாசுக்கு போகிறார். சிறிது தூரம் நடந்து மீண்டும் ஓடி வந்து கோபியை கட்டிப்பிடித்து தேங்க்யூ அப்பா என்று கூறிவிட்டு கிளம்புகிறார் .அடுத்ததாக பாக்யா அமிர்தாவுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார். எங்கள் வீட்டில் இப்போது நிலைமை சரியில்லை அதனால் தான் உங்களுடைய திருமணத்தை பற்றி என்னால் பேச முடியவில்லை நீயும் என்னுடைய மகனை உண்மையாக காதலிக்கறாயா? எழில் யாரையும் ஏமாற்ற மாட்டான். அதனால் கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி முடிக்கிறார்.

பாக்யாவுக்கு கிடைத்த அதிர்ச்சி
அடுத்ததாக அனைவரும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது இனியாவின் தோழி நிகிலாவின் அம்மா பாக்கியாவுக்கு போன் போட்டு நீங்க ஸ்கூலுக்கு வரலையா ?ஹெட் மாஸ்டர் வர சொல்லி இருந்தார்களே என நடந்த விஷயத்தை சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகி ஸ்கூலுக்கு செல்கிறார். அங்கே ஹெட் மாஸ்டர் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும்போது அவர் அதான் உங்கள் வீட்டில் இருந்து உங்கள் கணவர் இனியாவின் அப்பா வந்து பேசிவிட்டு போய்விட்டாரே, நீங்களும் அவரும் ஒரே வீட்டில் தானே இருக்கிறீர்கள். உங்களிடம் சொல்லலையா? என்று கேட்கிறார். இதை கேட்ட பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications