ராதிகாவை கலாய்த்து விரட்டிய செல்வி..பாக்யாவின் மீது ஈஸ்வரிக்கு வரும் சந்தேகம்.. இனி நடப்பது இதுதான்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா பியூட்டி பார்லரில் சென்று இருந்த நேரத்தில் அங்கே இருக்கும் ராதிகா தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியா பியூட்டி பார்லர் சென்று வந்த பிறகு அவரிடம் மாற்றம் தெரிவதாக ஈஸ்வரி பாக்யாவை குறித்து சந்தேகப்படுகிறார்.
ராதிகா முன்பு பாக்யாவை பற்றி பெருமையாக பேசி செல்வி கடுப்பேத்த அங்கிருந்து கோபத்தோடு ராதிகா வெளியேறுகிறார்.

புலம்பும் ராதிகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா ஜெனி மற்றும் செல்வியோடு பியூட்டி பார்லர் சென்று இருந்த நிலையில், ராதிகா பாக்கியா வந்திருப்பது தெரியாமல் தன்னுடைய கல்யாண விஷயம் குறித்தும் தன்னுடைய வாழ்க்கையை குறித்தும் வருத்தமாக பேசுகிறார். சில சமயம் சந்தோஷமாக இருக்கு, சில சமயம் ஏண்டா கல்யாணம் பண்ணனும்னு இருக்கு, சில சமயம் கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் சந்தோஷமா தான் இருந்தோம் எதுக்கு இந்த வாழ்க்கை என்று தோன்றுகிறது என ராதிகா புலம்பி கொண்டிருக்கிறார். அதை பார்த்த செல்வி எல்லார் வீட்டிலேயும் இதுதான் நடக்கிறது இந்த அம்மா ஏதோ இவங்களுக்கு மட்டும் நடக்கிற மாதிரி புலம்பிக்கிட்டு இருக்கிறார்கள் என ராதிகா தான் பேசுவது என தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

ராதிகாவின் சிந்தனை
அடுத்ததாக பாக்யாவுக்கு ஹேர் கலரிங் செய்த பிறகு ராதிகாவை ஹேர் வாஷ் செய்ய அழைக்க பாக்யாவும் ஹேர் வாஸ் செய்து வருகிறார். அப்போது ராதிகா செல்வி மற்றும் ஜெனியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு செல்வி இந்தம்மா தானா இவ்வளவு நேரமா கல்யாணத்தைப் பற்றி பேசி புலம்பிக்கிட்டு இருந்தது என நக்கல் அடிக்கிறார். அடுத்து ராதிகா பாக்யாவை பார்த்து இன்னும் அதிர்ச்சி அடைகிறார். வீட்டை தவிர எதுவுமே தெரியாது. வீட்டில் உள்ளவர்கள் தான் எனக்கு முக்கியம் என்று சொல்லிக்கிட்டு இருந்த மேடம் பியூட்டி பார்லர் எல்லாம் வருவாங்களா? என மனதுக்குள்ளே நினைத்துக் கொள்கிறார்.

இவ்வளவு பணமா
பிறகு பாக்யாவிடம் வேற என்ன மேடம் பண்ணனும் என கேட்க, ஜெனி ஆன்ட்டிக்கு பேசியல் பண்ணி விடுங்க என சொல்ல பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பெடிக்யூர் மட்டும் போதும் என பாக்யா சொன்னதும், அக்காவுக்கு எதுக்கு பேசியல் அக்கா இயற்கையாகவே அழகாகத் தான் இருக்கிறார். அதெல்லாம் இயற்கையில் அழகு இல்லாதவங்க பண்றது என சைடு கேப்பில் ராதிகாவை செல்வி ஓட்டுகிறார். இதனால் கடுப்பாதான் ராதிகா போதும் என வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். ராதிகா தான் செய்ததற்கு பில் எவ்வளவு என கேட்க அங்கே 16 ஆயிரம் ரூபாய் என சொன்னதும் அதை கேட்டு செல்வி பாக்கியா அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்கியாவை சந்தேகப்படும் ஈஸ்வரி
கோபி சாரின் பணம் இந்த அம்மாவுக்கு செலவு செய்யணும் என்று இருக்கிறது. உனக்கு வீட்டு செலவுக்கு பத்தாயிரம் ரூபாய் கூட தருவதற்கு என்னலாம் பேசுவாறு இப்போ இப்படி பண்றாரு என்று செல்வி பாக்கியாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். பிறகு பாக்யா வீட்டிற்கு வர ரொம்ப அழகா இருப்பதாக ஜெனி இடம் சொல்கிறார். வீட்டிற்குள் நுழையும்போது அத்தை என்ன சொல்லுவாங்களோ பயந்து தயங்கியபடியே நிற்க அப்போது அங்கே வரும் ஈஸ்வரியை பார்த்து உடனே தலை முடியை வாரி கட்டிக்கொண்டு உள்ளே செல்ல, ஈஸ்வரி என்ன போகும்போது டல்லா போன இப்போ வரும்போது பளபளவென்று இருக்கா என கேட்க, எதையோ சொல்லி சமாளிக்கிறார். ஆனாலும் பாக்கியா கிட்ட ஏதோ மாற்றம் இருக்கு என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications