கோபியின் திருமணத்தை நிறுத்துவதற்கு வந்த இனியா.. கடைசி நேரத்தில் இப்படியா? செம..!! இன்றைய எபிசோடு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று மணமேடையில் கோபி, ராதிகா அமர்ந்திருக்க திருமணத்தை நிறுத்துவதற்காக இனியா குடும்பத்தோடு வந்திருக்கிறார்.
கடைசி நேரத்தில் இப்படி இனியா குடும்பத்தோடு வருவார் என்று கோபி எதிர்பார்க்கவில்லை.
அப்பாவையும் மனைவியும் திட்டி அனுப்ப முடிந்த கோபி, மகளை என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு கூட்டி இருக்கின்றனர்.

ஈஸ்வரியின் கேள்வி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் எப்போது நடைபெறும், எப்படி நடைபெறும் என்று எதிர்பார்ப்பை கூட்டி இருந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில், வீட்டில் இனியா, ஜெனி மற்றும் பாட்டி என மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராமமூர்த்தி வேகவேகமாக வெளியே கிளம்ப தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி தூங்கிட்டு தானே இருந்தீங்க எதுக்கு எழுந்து வந்தீங்க என்று கேட்கிறார்.

குடும்பத்திற்கு தெரிய வந்த உண்மை
தூங்கிக்கிட்டு இருந்தா, அப்படியே விட்டு விடுவியா? .எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் போய் ஆகணும் என்று ராமமூர்த்தி கெளம்ப, காபி குடிச்சிட்டு போங்க என்று ஈஸ்வரி காபியை எடுத்து வந்து கொடுக்கறாங்க. அப்போது காபியை ராமமூர்த்தி தட்டி விட்டுவிடுகிறார். அதனால் இவருக்கு என்ன ஆச்சு என்று மூவரும் கேள்வி கேட்க அதற்கு இன்று கோபிக்கு கல்யாணம். அது மட்டுமல்லாமல் அங்கு சமையல் செய்து கொண்டிருப்பது பாக்கியா தான் என்று உண்மையை கூறுகிறார். இதனை கேட்ட மூன்று பேரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். வழக்கம் போல இனியா டாடி ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார். அப்படியே ஜெனியும், அங்கிள் ஏன் இப்படி பண்றாங்க? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று ஈஸ்வரி சொல்கிறார்.

பாக்யாவின் பிடிவாதம்
பிறகு ஜெனியை மட்டும் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு இனியா, தாத்தா ,ஈஸ்வரி மூவரும் ஆட்டோவில் ஏறி மண்டபத்திற்கு வருகின்றனர். அங்கே பாக்கியா சமையல் வேலைகளை முடித்துவிட்டு எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சி என நிம்மதி அடைய,வடை போடணும் என்று ஞாபகம் வந்து மாவை எடுக்கச் சொல்ல பாக்கியவை தடுத்து நிறுத்துகிறார் செல்வி. உனக்கு வருத்தமா இல்லையா அக்கா? என செல்வி கேட்க பாக்கியா சமையல் பற்றி பேச, கடைசி இன்னும் கொஞ்ச நேரத்துல உன் புருஷன் உனக்கு இல்லன்னு ஆயிடும். நீ ஒரு வார்த்தை சொல்லு நான் கலாட்டா பண்ணி கல்யாணத்தை நிறுத்துவேன் என செல்வி சொல்கிறார். நீ எதுக்கு இவ்வளவு வருத்தப்படுற என பாக்கியா கேட்க உன்னை இப்படி பார்க்க முடியல என்று செல்வி அழுகிறார்.

கடைசி ட்விஸ்ட்
செல்வியை பாக்யா சமாதானம் செய்த பிறகு, உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா? என செல்வி கேட்க போய் வேலையை பாரு என பாக்யா வடை போட சென்று விடுகிறார். பாக்கியா ஒரு பக்கம் சமையல் வேலைகளை பார்க்க மணமேடையில் கோரியும், ராதிகாவும் அமர்ந்திருக்க இவர்களுடைய கல்யாண வேலை அமோகமாக நடந்து வருகிறது. ஐயர் மந்திரம் ஓதி கொண்டிருக்கிறார். அப்போது ராமமூர்த்தி, ஈஸ்வரி, இனியா என மூவரும் ஆட்டோவில் வேக வேகமாக வந்து கொண்டு இருக்கின்றனர். கெட்டிமேளம் சொன்னதும் தாலியை எடுத்து கோபி ராதிகாவின் கழுத்தில் கட்டலாம் என்று இருக்கும் போது மூவரும் மண்டபத்திற்கு வந்து இறங்கி விடுகின்றனர். இத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு இன்று முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications