கெத்தா..மாஸா..சின்னத்திரையில் களமிறங்கிய பாலாஜி முருகதாஸ்... ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் அறிமுகமாகியிருக்கிறார்.
சிறப்பு விருந்தினராக வந்து தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

பிக்பாஸ் நான்காவது சீசனின் ரன்னர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் மாடலிங்கில் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இதற்கு முன்பு இவர் ஆணழகன் பட்டங்களை பெற்று இருந்தாலும் அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு தெரியாமல்தான் இருந்தது. ஆனால் பிக்பாஸ் நான்காவது சீசனில் ரன்னராக ஜெயித்து இவருடைய ரசிகர்கள் இவர் மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டிவிட்டார்.

ரசிகர்களை கவர்ந்த அந்த கேரக்டர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய தனித்திறமையாலும் எதற்கும் பயப்படாத கேரக்டரினாலும் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும் பழகிப் பார்த்தால் குழந்தைத்தனமாக இருக்கும் இவருடைய கேரக்டரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திருந்தது. இவர் இந்த பிக் பாஸ் நான்காவது சீசன் டைட்டில் ஜெயிக்கவில்லை என்று தெரிந்த போது பல குழந்தைகள் இவருக்காக அழுது சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு இருந்தது. அந்த நேரத்தில் அந்த வீடியோக்களும் வைரலாக பரவி வந்தது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தற்போது சின்னத்திரையில் மீண்டும் அறிமுகமாகியிருக்கிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
மாடலிங்கில் இவர் பல விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், புது திரைப்படங்களில் தற்போது இவர் நடித்துக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. நிகழ்ச்சியின் தரப்பிலிருந்து இன்னும் அதற்கான கன்ஃபார்ம் செய்தியை கூறவில்லை என்றாலும் இவரின் ரசிகர்கள் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சிறப்பு விருந்தினராக அறிமுகம்
விஜய் டிவியில் இதுவரைக்கும் இருந்து வந்த இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு விருந்தினராக அறிமுகமாகியிருக்கிறார். தன்னுடைய ஸ்டைலான நடையால் போட்டியாளர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் பேச்சு மற்றும் ஸ்டைல் எப்படி செய்யவேண்டும் என்று இவர் சொல்லிக் கொடுக்க வந்துள்ளார். இவருடைய திடீர் என்ட்ரியால் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் திக்குமுக்காடி போயிருக்கின்றனர். இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க ரெடியாக இருக்கின்றோம் என்று இவருடைய தீவிரமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications