வேட்டியை தூக்கிகட்டி...குமரி பெண்களுடன் குத்தாட்டம் போட்ட பாலாஜி
சென்னை : "வேட்டியை மடிச்சு கட்டிக்கோ" என்னும் பாட்டுக்கு பிக்பாஸ் பாலாஜி போட்ட ஆட்டம் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக கலக்கி வருகிறது.
கலக்கலாக கல்யாண வீட்டில் பெண்கள் படை சூழ வெட்கத்தோடு இவர் ஆடியதை பார்த்து அந்த இடத்தில் நாம இல்லையே என்று பல பெண்கள் ஏங்கி வருகிறார்களாம்.
மீசையையும், தாடியையும் குறைத்து கலக்கல் கெட்டப்பில் வலம் வரும் பாலாஜியின் ஸ்டைலை பல இளைஞர்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்களாம்.

வேஷ்டி சட்டையில் கலக்கல்
அண்ணனோட கல்யாணத்தில் மாப்பிள்ளை கோலத்தில் வலம் வந்து கொண்டிருந்த பிக்பாஸ் பாலாஜி திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஸ்டேஜில் ஏறி குமரி பெண்களோடு ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார். பெண்கள் பட்டாளம் புடை சூழ இவர் நடுவில் நின்றுகொண்டு "வேட்டியை மடிச்சு கட்டிக்கோ" என்னும் பாட்டுக்கு வேட்டியை தூக்கி பிடித்தபடி கலக்கலாக ஆட்டம் போட்டிருக்கிறார். இவருடைய ஆட்டத்தைப் பார்த்து அருகில் இருக்கும் பெண்கள் வெட்கப்படுகிறார்களோ இல்லையோ இவரே வெட்கத்தால் பாதிக்கு மேலே ஆட முடியாமல் கீழே இறங்கி விட்டார்.இவருடைய லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்த அவருடைய இளம் ரசிகைகள் ஆரவாரமாக கமெண்ட்களில் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

பெண்களுக்கு மத்தியில் ஆட்டம்
இளம் பெண்கள் தான் இவர் மீது பித்து பிடித்தது போல கமெண்டுகளை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் இளைஞர்களும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போட்டுக்கொண்டு இவருக்கு கமெண்டுகளை குவிக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு வரைக்கும் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமாக வில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடித்த ஹீரோவாக வலம் வரத் தொடங்கி விட்டார். இவருடைய முரட்டுத்தனமான அன்பை பார்த்த பல ரசிகர்கள் இவருக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

மாற்றம் கொடுத்த பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இவர் ஆணழகன் பட்டத்தை பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல விளம்பர மாடலாகவும் பல விளம்பரங்களில் நடித்து இருக்கிறார். அதிலெல்லாம் கிடைக்காத பெரும் புகழையும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வாங்கி கொடுத்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தையும், ஒரு சிலர் இவரா இப்படி என்று சொல்லுமளவிற்கு ரசிகர்கள் வெறுக்க தொடங்கி விட்டனர். ஆனால் பாலாஜியின் கேரக்டரை பலரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று தான் கூறிக் கொண்டிருந்தனர். திடீரென்று அன்பை மழை போல பொழிவதும் ஒரு சில நேரங்களில் டக்கென்று கோபப்படுவதும் இவருக்கு எதார்த்தமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

குழந்தை ரசிகர்களும் அதிகம்
இவர் என்னதான் அடுத்தவர்களின் மீது கோபப்பட்டு கொண்டிருந்தாலும் கோபம் குறைந்ததும் தன்மீது தப்பு இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் குணமும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. பலர் இவர்தான் டைட்டில் வின் பண்ணுவார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் இவர் இரண்டாவதாகத் தான் வெற்றி பெற்றிருக்கிறார் எனும் செய்தியை கேள்விப்பட்டதும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமூக வலைத்தளத்தில் தங்களுடைய ஏமாற்றங்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். அதிலும் ஒருசில குழந்தைகள் கூட இவருக்கு சப்போர்ட் செய்தது தான் இவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். இவருக்காக தான் இந்த நிகழ்ச்சியை பார்த்தோம் என்று அவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோக்களும் வைரலாக பரவி வந்தது.

அடடா என்ன ஆட்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜி பொதுமக்களிடம் நன்றாகவே பாப்புலர் ஆகிவிட்டதால் பல கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாடலிங்கும் செய்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட வீடியோ இவருடைய ரசிகர்களின் மத்தியில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. வேஷ்டி சட்டையில் இவர் கலக்கலாக இருப்பதை கண் இமைக்காமல் ரசித்து கொண்டிருந்த ரசிகர்கள் இவர் போட்ட ஆட்டத்தை பார்த்து அப்படியே சொக்கி போய் விட்டார்களாம்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications