பிக்பாஸ் அல்டிமேட்: ஓவியாவை பற்றி மீண்டும் ஜூலியிடம் கேள்வி... இந்தமுறை இதுதான் பதிலா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியாவை பற்றி சக போட்டியாளர்கள் ஜூலியிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
ஓவியாவை பற்றி தன்னிடம் இப்படி ஒரு கேள்வியா என்று திகைத்துப் போன ஜூலி, கூறிய பதில் அல்டிமேட் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரம்மாண்டமாக தொடங்கிய அல்டிமேட்
ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஞாயிற்றுக்கிழமை முதல் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலே 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமாக இருப்பதால், நிகழ்ச்சி பற்றிய ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. தங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர்களை மீண்டும் இந்த நிகழ்ச்சியில் பார்த்ததும் ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு அதிக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இரண்டாவது நாளே இப்படியா
இந்தியில் இந்த நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது. தற்போது இதே பாணியில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கியது. பிக்பாஸ் அல்டிமேட்டை ஹாட்ஸ்டாரில் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்களாம். இந்த நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே ஜூலி இடம் போட்டியாளர்கள் கேள்வி கேட்கிறோம் என்கிற பெயரில் கேட்ட கேள்வி ஜூலியை மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.

தவறை சரி செய்வதற்காகதானாம்
முதல் சீசனில் அறிமுகமான ஜூலியை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் ரசிகர்கள் பலருக்கும் தெரியும். இதே நிகழ்ச்சியில் இவருடன் கலந்து கொண்ட நடிகை ஓவியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓவியா அதிகமாக பாப்புலராகி விட்டார். ஜூலி பெரிய அளவில் நெகட்டிவ் கேரக்டர் ஆக மாறிவிட்டார். ஓவியா விஷயத்தில் தான் செய்த தவறை புரிந்துகொண்டு மீண்டும் தன்னுடைய தவறை திருத்திக் கொள்வதற்காக தான் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கலந்து கொண்டுள்ளார். ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த ஓவியா இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இன்னும் கலந்து கொள்ளவில்லை.

ஜூலியின் புது கருத்து
தற்போது அல்டிமேட் இந்நிகழ்ச்சியின் ஜூலியுடன் இருக்கும் சக போட்டியாளரான அபிராமி, ஜூலியிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதில் நீங்க ரொம்ப ஓவியா மாதிரி இருக்க ட்ரை பண்ற மாதிரி இருக்கு...என்று கூறியிருக்கிறார். அதற்கு ஜூலி எப்போதும் போல சிரித்துக் கொண்டே, ஓவியா மாதிரி இருக்கணும் என்று எல்லாம் ட்ரை பண்ணல என்று பதில் கூறி இருக்கிறார். இதை கேட்ட ஜூலியின் ரசிகர்கள் ஜூலிக்கு ஆதரவாக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர். அதுபோல ஓவியாவின் ரசிகர்கள் ஓவியா இதில் இல்லை என்றாலும் அவர் பெயர் இன்னும் ஜொலிக்குது. நிஜமான அல்டிமேட் ஓவியா தான்.. என்று ஓவியாவின் புகழைப் பாடி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications