ஊர் மக்களின் தப்பான பேச்சால் அப்பா சொன்ன வார்த்தை.. கண்ணம்மாவின் எதிர்பார்க்காத முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் கேரக்டரை களங்கப்படுத்தும் விதமாக பாண்டி செய்த செயலால் ஊர் மக்கள் கண்ணமாவை தப்பாக பேசுகின்றனர்.
ஊருக்குள் என்ன நிலவரம் என்பது தெரியாமல் பாரதியும் கண்ணம்மாவும் இருக்கின்றனர்.
ஊர் மக்கள் தப்பாக பேசுவதால் கண்ணம்மாவில் அப்பா பாரதியோடு சேர்ந்து வாழ கண்ணம்மாவை கூறுகிறார்.

குழப்பத்தில் இருக்கும் கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் எல்லோரும் கண்ணம்மாவிடம் பொருள் வாங்காமல் திருப்பி அனுப்பிய நிலையில் ஏதோ நடந்திருக்கிறது என்ன நடந்திருக்கிறது என்று தெரியவில்லையே என்று வருத்தத்தோடு வீட்டிற்கு வரும் கண்ணம்மா அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். தாமரை கண்ணம்மா புலம்புவதை பார்த்து கடைவீதி வரைக்கும் கண்ணம்மா பற்றி தப்பாக பேச்சி போயிருக்கிறது என்று புரிந்து கொண்டு இதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கண்ணம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.

போகி பண்டிகை விளக்கம்
மறுநாள் போகி பண்டிகையை கொண்டாடும்போது எதற்காக கொண்டாடுகிறோம் என குழந்தைகள் கேட்க பழைய பொருட்களை எடுத்துவிட்டு புதிய பொருளுக்குகளை வாங்குவதற்காக தான் கொண்டாடுகிறோம் என்று கண்ணம்மா சொல்வதைக் கேட்டு பாரதி சிரித்து விட்டு அது இல்லை என்று, நம்மிடம் இருக்கும் விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு எல்லோரிடமும் அன்பாகவும் அக்கரையாகவும் பழக வேண்டும் என்பதற்காகத்தான் போகி பண்டிகை கொண்டாடுவதாக கூறுகிறார். அதைக் கேட்ட லட்சுமி அப்பா சொல்வது சரிதானா என கேட்க கண்ணம்மா நான் பழசை எல்லாம் மறந்துட்டேன் என கூறி கோபமாக உள்ளே செல்கிறார்.

ஊர் தலைவரின் அறிவுரை
அடுத்த நாள் ஊர் தலைவர் பாரதியிடம் வந்து பேச வர பாரதி அவருடைய உடல் நலத்தை பற்றி விசாரிக்கிறார். பின்பு ஊர் தலைவர் பாரதியிடம் நீங்க எதுக்கு இங்க இருந்து கஷ்டப்படனும்.உங்க ஊருக்கு போயிடலாமே, வேண்டான்னு சொல்ற பொண்ணு எதுக்கு ?நீங்க வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமாக இருங்க என சொல்ல, அதற்கு பாரதி நான் கண்ணம்மாவிற்கு செய்த துரோகத்திற்கு பிரசித்தம் ஆக தான் இங்கே இருந்து இருக்கின்றேன். நான் கண்ணம்மாவோடு தான் ஊருக்கு போவேன் என்று உறுதியாக கூறுகிறார். ஊருக்குள் கண்ணம்மாவை பற்றி பேசுவது தெரியாமல் இவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாரே என்று ஊர் தலைவர் பட்டும் படாமல் பாரதிக்கு அட்வைஸ் கொடுத்து விட்டு கிளம்புகிறார்.

பாரதியை கலாய்க்கும் ஊர்காரர்கள்
அடுத்ததாக ஊரில் குஸ்தி போட்டி நடக்க அதில் செல்லப்பாண்டி தொடர்ந்து ஜெயித்து வருகிறார். பாரதியும் கணபதியும் டீ குடிக்க செல்ல அப்போது டீக்கடையில் கண்ணம்மாவை பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வரும் பாரதியை பார்த்ததும் மறைமுகமாக கண்ணம்மாவை பற்றி தவறாக பேச, பாரதி அது புரியாமல் இருக்கிறார் .அதற்கு பிறகு ஏற்கனவே ஊருக்குள் நடக்கும் விஷயங்களை கணபதிக்கு தெரிந்ததால் கணபதி அதைப்பற்றி தான் இவர்கள் பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு பாரதியை அங்கிருந்து வாங்க வீட்டுக்கு போகலாம் என அழைத்து வந்து விடுகிறார்.

அப்பா கூறிய வார்த்தை
பிறகு கண்ணம்மாவின் அப்பா யாரிடமோ சண்டை போட்டு சட்டை கிழிந்து சேரும் சகதியும் ஆக வீட்டிற்கு வர, கண்ணம்மாவும் தாமரையும் பதறிப் போய் என்ன ஆச்சு என கேட்க ஊர் ஜனங்கள் நாக்கில் நரம்பில்லாமல் என்னென்னமோ பேசுறாங்க என்று கூறிக்கொண்டு அப்பா எது சொன்னாலும் உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்லுவேன்னு உனக்கு தெரியுமில்லா? இப்போ சொல்றதையும் கேளுமா என சொல்ல, கண்ணம்மா என்ன என்று கேட்க, நீ உன்னுடைய புருஷனோடு சேர்ந்து வாழு, என சொல்ல கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications