மீண்டும் பாரதி கண்ணம்மாவுக்கு ஒரு "அவார்ட்” பார்சல்.. மறுபடியும் முதலில் இருந்தா..!!!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலை அடுத்த கட்டத்தை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ஏற்கனவே பல திரைப்படங்களை காப்பியடித்து வருகிறார்கள் இந்த சீரியல் என்று பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், மீண்டும் முதலில் இருந்தா?? என்று தற்போது அவார்டு ஃபங்ஷனையும் விட்டு வைக்காமல் கலாய்த்து வருகிறார்கள்.
அடுத்து இந்த அவார்ட் ஃபங்ஷன் முடிந்ததும் எந்த திரைப்படத்தை காப்பி அடிக்க போகிறார்கள் என்று ஆர்வத்தோடு ரசிகர்கள் கமெண்ட்களில் இயக்குனரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

எதிர்பார்க்காத வளர்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்ப முதலே அடிக்கடி ட்ரெண்டிங்கில் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் கதைக்களம் ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் நார்மலாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணம்மா கையில் கைப்பையோடு கிளம்பிய காட்சிகள் தான் வேற லெவலில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு கலாய்க்கப்பட்டதால், என்ன தான் இந்த சீரியலில் இருக்கிறது ..!! என்று பலரையும் இந்த சீரியலை திரும்பி பார்க்க வைத்தது.

சென்னையில் ஒரு நாள்
அதுவரைக்கும் இந்த சீரியலை பார்க்காமல் இருந்த ரசிகர்கள் கூட கண்ணம்மாவை நெட்டிசன்கள் அதிகமாக ட்ரோல் செய்ததால் இந்த சீரியலை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் அதிகமாக திரைப்படங்களின் காட்சிகள் டப்பிங் செய்யப்படுவதாக ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தை மையமாகக் கொண்டு ஒரு சில வாரங்கள் சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு மிரட்டி வந்தது.

நொந்து போன ரசிகர்கள்
சென்னையில் ஒரு நாளை தொடர்ந்து ஒரு அவார்ட் பங்ஷன் வைத்து பாரதியை கௌரவித்து இருந்தன. அந்த நேரத்தில் இதற்கு எல்லாம் காரணம் நான் அல்ல கண்ணம்மா தான் என்று பாரதி கூறியிருப்பார். அப்போவே இனியாவது கண்ணம்மாவை புரிந்து கொண்ட பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் நான் அங்கே வைக்கிறேன் "டுவிஸ்ட்"என்று இயக்குனர் கதையை வேறு பக்கமாக திருப்பி பீட்ஸ் பட கதையை உள்ளே புகுத்தி விட்டார். தற்போது இரண்டு மூன்று வாரங்களாக தீவிரவாதிகள் பிடியில் பாரதியின் மருத்துவமனை சிக்கி இருந்ததை பார்த்து, பலரும் நொந்து போகும் அளவிற்கு சீரியல் சீன்கள் இருந்தது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மீண்டும் அவார்ட் ஃபங்ஷன்
ஏற்கனவே சென்னையில் ஒரு நாள் பட காபி சீன்ஸ் முடிந்ததும், ஒரு அவார்ட் ஃபங்ஷன் வச்சி பாரதிக்கு விருது கொடுத்தாங்க. . இப்போ பீட்ஸ் முடிந்ததும் மறுபடியும் ஒரு அவார்ட் ஃபங்ஷன் வைக்கிறாங்க..., இப்போ பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் அவார்டு என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் மீண்டும் கண்ணம்மாவும் பாரதியும் சேர்வார்களா?? என்று ஒரு சில அப்பாவி ரசிகர்கள் கருத்துக்களை எழுப்பி வருகிறார்கள். அது இயக்குனர் கையில் மட்டுமே இருக்கிறது என்று வழக்கம் போல பலரும் அதற்கு பதிலளித்து வருகிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications