பிரபல சீரியலை காப்பி அடிக்கிறதா பாரதி கண்ணம்மா? இந்த கதையை கவனித்தீர்களா? கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் கதை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலின் கதையை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வாரத்தோடு பாரதி கண்ணம்மா சீரியலில் சுபம் போடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அது மீண்டும் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வமாக ரசிகர்கள் இந்த சீரியலின் கதை காப்பி அடிப்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

கிடைப்பது ஏமாற்றம்தான்

கிடைப்பது ஏமாற்றம்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நெட்டிசன்களுக்கு அதிகமாகவே பிடித்த சீரியல். இந்த சீரியல் ஆரம்பமான ஒரு சில எபிசோடுகளில் இருந்தே அதிகமாக சமூக வலைத்தளத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது. ட்ரோல்ஸ்களிலும், மீம்ஸ்களின் மூலமாகவே இந்த சீரியல் பாப்புலரான நிலையில் இந்த சீரியலில் முடிவு எப்போது என்று ரசிகர்கள் அதிகமானோர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு முதல் பாகம் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனாலே நிம்மதி பெருமூச்சு விட்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் ஒவ்வொரு நாளும் கிடைத்து வருகிறது. இந்த வாரம் முடிவடையும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது.

ரசிகர்கள் நினைத்தது நடந்தது

ரசிகர்கள் நினைத்தது நடந்தது

ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் முடிவடைந்து விடும் இந்த சீரியலை நான்கு வருடங்களாக ஓட்டி விட்டார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்தாலும் பல வருடங்களாக எதிர்பார்த்து இருந்த திருப்பம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. ஒரு வழியாக பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துவிட்டார். அதுபோல இதுவரைக்கும் வெண்பா செய்து வந்த அனைத்து தில்லாலங்கடி வேலைகளும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. பாரதியின் மீது மொத்த குடும்பமும் கோபத்தில் இருக்கின்றது பாரதி ஒரு வழியாக திருந்தி விட்டார் தன்னுடைய தப்பை உணர்ந்து கண்ணம்மா காலில் விழுந்து மணிப்பையும் கேட்டு விட்டார். ஆனால் இந்த வாரத்தில் கண்ணம்மா பாரதியை மன்னித்து சேர்ந்து வாழ்ந்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

கண்ணம்மாவின் அடுத்த பயணம்

கண்ணம்மாவின் அடுத்த பயணம்

நீங்கள் நினைத்த மாதிரி நாங்கள் கிடையாது என்பதை சீரியல் அணியினர் சிறப்பாக நிரூபித்து விட்டனர். டெஸ்ட் எடுப்பதற்கு முன்புவரைக்கும் கண்ணம்மா நாம் இருவரும் சேர்ந்து வாழலாமா? என்று பாரதியிடம் கேட்டு வந்தார். ஆனால் டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு பாரதி கண்ணம்மாவை புரிந்து கொண்ட பிறகு இனி உன்னோடு என்னால் சேர்ந்து வாழ முடியாது என்று வழக்கமாக கண்ணம்மா சொல்லும் டயலாக்கை எல்லாம் மொத்தமாக கொட்டி விட்டு தன்னுடைய குழந்தைகளோடு கிளம்பிவிட்டார். மீண்டும் கண்ணம்மாவை எப்படியாவது சமாதானம் செய்துவிடலாம் என்று மொத்த குடும்பமும் கண்ணம்மாவை தேடி வீட்டிற்கு செல்கிறது. ஆனால் கண்ணம்மாவிடம் குழந்தைகள் நாம் இங்கு இருக்க வேண்டாம் வேறு இடத்துக்கு சென்று விடுவோம் என்று கூறி குடும்பத்தோடு பஸ்ஸில் சென்று விடுகிறார்கள்.

ஜீ தமிழ் சீரியலின் கதை

ஜீ தமிழ் சீரியலின் கதை

இதே கதை தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "தெய்வம் தந்த பூவே" சீரியலில் ஒளிபரப்பாகி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். காரணம் ஒரு சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியல் பாரதி கண்ணம்மா சீரியலை காப்பியடிப்பதாக இருந்ததாக கூறி வந்தனர். கதாநாயகன் வினய் ஆரம்பத்தில் கதாநாயகி மித்ரா வை திருமணம் செய்த பிறகு உருகி உருகி காதலித்து வருவார். மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில வில்லியின் சூழ்ச்சியால் மனைவியின் மீது சந்தேகப்பட்டு கதாநாயகன் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார். பின்பு இந்த குழந்தை கதாநாயகனுக்கு தான் பிறந்தது என்பதை கதாநாயகி நிருபித்து விட்டு வீட்டை விட்டு கிளம்பி விடுவார், இப்போது கதாநாயகன் கதாநாயகியை தேடி அவருடைய சொந்த ஊருக்கு வந்து அந்த ஊரில் யாருக்கும் உண்மையை சொல்லாமல் ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார்.

இதுவும் சுட்ட கதை தானா

இதுவும் சுட்ட கதை தானா

தற்போது அதேபோலவே பாரதி கண்ணம்மா சீரியலும் கண்ணம்மா உண்மை எல்லாம் நிரூபித்து விட்டு வீட்டை விட்டு கிளம்பி வெளியே செல்லும் கதையைப் பார்த்து இது அந்த சீரியலின் கதையை சுட்டதுதானா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பல வருடங்களாகவே இந்த சீரியலில் அடிக்கடி புதியதாக வரும் திரைப்படங்களின் கதைகளை அப்படியே காப்பி செய்து விடுவார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டாக இருக்கும் நிலையில், இப்போது சீரியல் கதையும் இங்கே புகுத்தப்பட்டிருக்கிறதா? என்பது கேள்வியாக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+