அப்போ ஷிவானி...இப்போ பவானி...பிக் பாஸ்க்கு சென்ற பிறகும் இன்ஸ்டாகிராமில் கலக்கும் பவானி ரெட்டி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே ஷிவானி போன சீசனில் இது மாதிரி பண்ணி விட்டாலும் இந்த முறை பவானி ரெட்டி அதே பாணியை கையாண்டு வருகிறார்.
நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாளில் பாலோவர்ஸ் இவ்வளவு ஸ்பீடாக அதிகரிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

ரசிகர்களுக்கு எனர்ஜி
சீரியல்களிலும், திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த பவானி ரெட்டி, ஒரு சில நாட்களாகவே எந்த சீரியலிலும் தென்படாமல் இருந்த இவர் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக தான் இருந்து வந்தார். அதுவும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் நாளுக்குநாள் இவருக்கு அதிகரித்து வருகின்றனர். தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது இவருடைய ரசிகர்களுக்கு செம என்டர்டைன்மென்ட் ஆக இருக்கிறதாம்.

சின்னத்தம்பி நந்தினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நந்தினி கேரக்டரில் சிம்மாசனமிட்டு அமர்ந்த இவர் அதற்கு பிறகு எந்த சீரியலிலும் காணவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் தவியாய் தவித்தனர். சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் விதமாக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருப்பது இருக்கிறதாம். பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஆர்மி
அந்த மாதிரி தான் இவருக்கும் கூட இந்த நிகழ்ச்சி திருப்புமுனையாக இருக்கும் என்று இவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இவர் கலந்து கொள்ளப் போகிறார் என்று ஒரு சில நாட்களாகவே இவருடைய பெயர் போட்டியாளர்களின் லிஸ்டில் அடிபட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இவர் முதல் நாளில் என்ட்ரி ஆகும் போது இவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டனர். சமூக வலைத்தளத்திலும் ஆர்மி அமைக்க தொடங்கிவிட்டனர்.

அப்போ ஷிவானி இப்போ பவானி
நிகழ்ச்சி தொடங்கிய ஒரே நாளில் முதல் முதலாக இவருக்குத்தான் ரசிகர்கள் ஆர்மி தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இவருடைய ஐடியில் இருந்து போஸ்ட் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ரசிகர்கள் என்ஜாய் பண்ணி கொண்டிருந்தாலும், ஏற்கனவே இதை ஷிவானி பண்ணி விட்டாரே என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.

பாலோவர்ஸ் அதிகரிப்பு
ரசிகர்கள் இவருக்கு இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் பேன்ஸ் பேஜ்களையும், ஆர்மி களையும் அமைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவருடைய பாலோவர்ஸும் அதிக அளவில் அதிகரித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு நேற்றைக்கு வரைக்கும் இருந்தவர்களை விடவும் இன்று அதிகமாக ரசிகர்கள் பாலோவர்ஸாக மாறி இருப்பது தெரிகிறது, ரசிகர்கள் இவருக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று பலர் கூறி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications