அட்வைஸ் மழை பொழியும் பாவனியின் அக்கா...பாவனி கூறிய அந்த ஒற்றை வார்த்தை!!
சென்னை: ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த பாவனியின் உறவினர்களின் வருகை நிகழ்ந்து விட்டது.
பாவனியின் உறவினர்களின் அட்வைஸ் பலமாக இருந்து வருகிறது.
சைக்கிள் கேப்பில் பிக்பாஸ் அமீர் முகத்தை சூம் செய்வதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வழக்கமான சம்பிரதாயம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக நடந்து வரும் ஒரு சம்பிரதாயமாக தற்போதைய சீசனின் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இந்த டாஸ்க் எப்போது நடைபெறும் என்று போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். ரசிகர்களின் ஆர்வம் தற்போது நிறைவேறி கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பமும் அனைவருக்கும் புது அனுபவத்தை கொடுத்து வருகிறது. பலருக்கும் தெரியாத போட்டியாளர்களின் இன்னொரு முகமும் இந்த டாஸ்க் மூலமாக தெரிந்து வருகிறது.

பாவனியின் குடும்பம் வருகை
பத்துப் போட்டியாளர்களில் யார் உறவினர்கள் வருகை ரசிகர்களை அதிகமாக பாதித்தது என்று தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதில் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்த பாவனியின் குடும்பம் வந்தது இன்றைய எபிசோடின் முதல் ப்ரமோவில் தெரியவந்துள்ளது.பாவனியின் அக்கா மற்றும் அம்மாவை பார்த்ததும் ரசிகர்கள் இவர்கள் என்ன மாதிரி நடந்து கொள்வார்கள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே போன சீசனில் ஷிவானியின் அம்மா நடந்து கொள்வதைப் போல இவர்கள் நடந்து கொள்வார்களா?? என்று பலருக்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது.

அக்கா அட்வைஸ் மழை
வழக்கம் போல இன்று பாவனியின் உறவினர்கள் வந்ததும் அனைவரும் அட்டன்டன்ஸ் போட்டு கட்டிப்பிடி வைத்தியம் நடத்தி இருந்தாலும் கடைசியாக பாவனியிடம் அவருடைய அக்கா பேசிக்கொண்டிருப்பதை தான் காட்டி இருக்கிறார்கள். அதில் அவருடைய அக்கா அட்வைஸ் மழை பொழிந்து வருகிறார். அப்போது அருகில் இருக்கும் அம்மா எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் சூம் வைத்த பிக்பாஸ் அடுத்ததாக அமீர் நடவடிக்கையை காட்டி வருகிறது. ஏதோ கடிதத்தை படித்தது போல இருக்கிறார். அதைப் பார்த்ததும் பாவனியின் உறவினர்கள் கொடுத்த கடிதம் தானா இது என்று கேட்டு வருகின்றனர்.
Recommended Video

ரசிகர்களின் கருத்தும் அதுதான்
இந்த வீட்டிற்குள் அனைவரும் உன்னிடம் நடந்து கொள்ளும் விதம் ஒரு மாதிரியாக இருந்தாலும் ஒருவர் மட்டும் உன்னிடம் நடந்து கொள்ளும் விதம் உனக்கு பிடிக்கவில்லை என்றால் அவரிடம் தைரியமாக பேசி விடு என்று பாவனி அறிவுறுத்தலுக்கு பாவனி அந்த இடத்தில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும். அதனால் தைரியமாக இருங்கள் என்று கூறியிருக்கிறார். இவர்களின் உரையாடலை பார்த்த ரசிகர்கள் பலர் பாவனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஒருசிலர் பாவனி நேரடியாக தைரியமாக ஆரம்பத்தில் பேச வேண்டும் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications