மீண்டும் ஒன்றாக காலடி எடுத்து வைத்த ஐந்தாவது சீசன் அணி...வேற லெவல் மூவ்மெண்ட் தான்
சென்னை: விஜய் டிவியில் மீண்டும் களமிறங்கும் பிக்பாஸ் அணியினர் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தற்போது நடந்து முடிந்த ஐந்தாவது சீசன் அணியின் வெற்றிக் கூட்டணியை மீண்டும் விஜய் டிவியில் பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஐந்தாவது சீசனை தொட்ட பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒருசில ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களின் ஆதரவு காரணமாக தான் ஒரு சீசன் முடிந்தாலும் தொடர்ந்து பல சீசன்கள் அதே பெயரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகமான டிஆர்பியை அதிகரித்து வரும் ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே போதும் தங்களுடைய வாழ்க்கை மாறிவிடும் என்று பல போட்டியாளர்கள் நினைத்துக் கொண்டிருப்பதால் தான் இதில் போட்டி போட்டுக்கொண்டு கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனை முடிவடைந்துள்ளது.

மீண்டும் வந்த பிரபலங்கள்
ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மீண்டும் விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஏற்கனவே விஜய் டிவியில் பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை என்டர்டைன்மென்ட் பண்ணிக் கொண்டிருப்பது போல, இவர்களும் வேற லெவல் பர்பாமன்ஸ் பண்ண காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் எடுத்த இவர்களுடைய போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்ததும் ஏற்கனவே இவர்களை ஒரு சில நாட்களாக மிஸ் பண்ணி வந்த ரசிகர்கள் மீண்டும் இவர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சி
ரசிகர்கள் பலர் தங்களுடைய மனக்கவலையை குறைப்பதற்காகவும், முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்காகவும் தான் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இதில் மதுமிதா, சிபி, பிரியங்கா, ராஜு,நிரூப், ஐக்கி பெர்ரி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் அன்பு கூட்டணியை பார்த்ததும் ரசிகர்கள் எப்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மதுமிதா வெளியிட்ட போட்டோஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரியங்கா விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்து இருப்பதால், இவர் மீண்டும் இனி தொகுப்பாளராக வருவாரா?? அல்லது சிறப்பு விருந்தினராக மட்டும்தான் வருவாரா?? என்பது பற்றியும் ரசிகர்களுக்கு கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் அதிக அளவில் நெகட்டிவ் கமெண்ட்கள் பிரியங்காவிற்கு வராததால் அவர் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் இந்த ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் அவர் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறாராம். தற்போது இவர்களுடன் எடுத்த ஜாலியான புகைப்படத்தை மதுமிதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications