தப்பு செஞ்சவங்களவிட தப்பு செய்யத் தூண்டுனவங்க கெட்டவங்க... தத்துவத்தை பேசி பிரச்சனையை தொடங்கிய தாமரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் கட்டிப்பிடித்து உருண்டு வந்தாலும் போட்டியில் அடித்துக் கொள்வதில் தாமரை மற்றும் பிரியங்காவை மிஞ்ச யாரும் இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இது நிஜ சண்டை தானா அல்லது ஏற்கனவே தாமரை சொல்வதுபோல பிக்பாஸ் சொல்லிக்கொடுத்து தான் இப்படி சண்டை போடுகிறார்களா? ?என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஓபன் நாமினேஷன்

ஓபன் நாமினேஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நேரடியாக எலிமினேஷன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக அடுத்த போட்டியாளர்களை எலிமினேஷன் செய்து வருகின்றனர். அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் சப்ப காரணமாக இருந்தாலும் இப்படி எல்லாம் கூட இருக்கிறதா?? என்று ரசிகர்கள் பலர் யோசித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல செயல்கள் ரசிகர்களுக்கு காண்பிக்கப்படாத நிலையில் ஒரு சில நிகழ்ச்சிகள் ஓவராக காட்டப் படுகிறதோ என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சொல்லிக்கொடுத்தவரோடு விளையாட்டு

சொல்லிக்கொடுத்தவரோடு விளையாட்டு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இந்த விளையாட்டை பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்த தாமரைக்கு பிரியங்கா தான் விளையாட்டை பற்றி சொல்லிக் கொடுத்தார். பின்பு தற்போது வரம் கொடுத்தவரின் தலையில் கை வைத்தது போல சொல்லிக்கொடுத்த பிரியங்காவிடமே தாமரைச்செல்வி தன்னுடைய விளையாட்டை காட்டி வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். டாஸ்க் என்று வரும்போது இவர்கள் இருவரும் அடித்துக் கொண்டு கட்டி புரல்வதும், டாஸ்க் முடிந்ததும் கட்டி பிடித்து முத்த மழை பொழிவதும் ஆரம்பத்திலிருந்தே வந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்களின் சந்தேகம்

ரசிகர்களின் சந்தேகம்

டாஸ்க்கில் இவர்களின் சண்டையை பார்த்து பல ரசிகர்கள் பயந்து போய் விட்டனர். என்ன இப்படி எல்லாம் சண்டை போடுகிறார்கள் என்று... நாட்கள் செல்ல செல்ல இவர்கள் சண்டை சுவாரஸ்யம் இல்லை, இது நிஜமாக நடக்கிறதா இல்லை கண்டெண்ட்க்காக நடக்கிறதா?? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில தீவிரமான ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக ஆதரவு கொடுத்து மாற்றி மாற்றி கமெண்ட் களில் ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு டாஸ்க் முடிந்ததும் ஒன்றாக சேர்ந்து கொஞ்சிக் குலாவுவதை பார்த்து ரசிகர்கள் பலர் காண்டாகி விட்டனர்.

ரசிகர்களின் வேண்டுகோள்

ரசிகர்களின் வேண்டுகோள்

இந்த நேரடியாக எலிமினேஷன் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில்கூட பிரியங்கா, தாமரைச்செல்வியை பார்த்து அப்போ நான் மட்டும் உனக்கு ரொம்ப ஈசியா போய் விட்டேனா!!?? பிரியங்கா தானே அவளை அடிப்போம் என்று நினைக்கிறாய் என கூறியிருக்கிறார். அதற்கு எதிர் பதிலாக தாமரைச்செல்வி, தப்பு செய்தவனை விட, தப்பு செய்ய தூண்டியவன் தான் கெட்டவன் என்ற தத்துவத்தை உதிர்த்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி நாமினேஷன் செய்துகொண்டாலும், கட்டிப்பிடி வைத்தியத்தை விடாமல் செய்து வருகின்றனர். இதை பார்க்கும் போது ரசிகர்கள் பலர் இதை பார்த்தாலே கடுப்பாக இருக்கிறது. இவர்கள் இருவரின் சண்டையை தயவு செய்து வெளியே காட்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+