இந்த ஜோடி எப்படி இருக்கு? "உசுரே” இனி நீதானே! பிக் பாஸ் ஜனனி வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவதில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான ஜனனி சமீபத்தில் நடிக்கும் உசுரே திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்களை ஜனனி சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கும் நிலையில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சிலர் ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். அதுபோலத்தான் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜனனி கலந்து கொண்டார். இவர் இலங்கையில் நியூஸ் வாசிப்பாளராக இருந்திருக்கிறார். அதுபோல சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் வயது குறைந்த போட்டியாளர் ஜனனி தான்.

அதனாலையே ஜனனி பேசுவது சில நேரங்களில் ட்ரோல் செய்யப்பட்டாலும் சில நேரங்களில் ரசிக்கப்பட்டது. அதுபோல ஜனனிக்கு தான் ஆறாவது சீசனில் அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் தொடங்கி இருந்தனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா கலந்து கொண்டார். அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டனர். அதேபோல ஜனனிக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியே சென்றதும் அவருக்கு நடிகர் விஜய் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதாவது லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஜனனி நடித்திருந்தார். அதற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படங்கள் இன்னும் பெரிதாக வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது ஜனனி கதாநாயகியாக நடித்துள்ள உசுரே திரைப்படம் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கண்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இசை வெளியீட்டு விழாவில் ஜனனி மற்றும் இந்த படத்தின் கதாநாயகன் ஆன டிஜே அருணாச்சலமும் ஜோடியாக கலந்து கொண்டனர். உணர்வுபூர்வமான காதல் கதை நிரம்பிய இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் நவீன் டி கோபால் இயக்குகிறார். லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ஜனனி இப்போது கதாநாயகி அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications