பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படிப்பட்டவரா? வெளியேற்றக் கூறி கோரிக்கை வைத்த பெண்கள் ஆணையம்!!
சென்னை: தற்போது ரியாலிட்டி ஷோவில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விடுவதால் போட்டியாளர்கள் நன்மதிப்பை பெற்றிருப்பது அவசியம் என்று தற்போது நடந்த நிகழ்வு ஒன்று பலருக்கும் உணர்த்தி உள்ளது.

ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனின் வெற்றியின் காரணமாகவே தற்போது பல சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே தங்கள் வாழ்க்கை முன்னேறி விடும் என்று பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபருக்கு எதிராக பெண்கள் ஆணையம் எடுத்திருக்கும் முயற்சிதான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறதா? பலருக்கும் குழப்பமாகத்தான் இருந்து வருகிறதாம்.

பெண்களின் குற்றச்சாட்டு
பெண்கள் ஆணையம் கம்ப்ளைன்ட் செய்தது இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16வது சீசன் கலந்து கொண்ட போட்டியாளர் இயக்குனர் சஜித் கானுக்கு எதிராகத்தான். இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவராக பிரபல இந்திய இயக்குனர் சஜித் காணும் கலந்து கொண்டார். அவர் ஏற்கனவே MeToo இயக்கத்தின் போது பல்வேறு பெண்கள் அவர் மீது பாலில் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர்.

அமைச்சருக்கு எழுதிய கடிதம்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குனர் சஜித் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று டெல்லி பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சருக்கு எழுத கடிதத்தையும் பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மல்லில்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவருடைய அந்த பதிவில் MeToo இயக்கத்தின் போது பத்து பெண்கள் தங்களுக்கு சஜித் கான் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்திருந்தனர்.அந்த புகார்களும் சஜித் கானின் அருவருத்தக்க தக்க மனநிலையை தான் காட்டுகிறது.அப்படிப்பட்டவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.இது மிகவும் தவறானது இதனால் அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளின் எதிரொலி
பிக் பாஸ் நிகழ்ச்சி பலதரப்பட்டவர்களும் பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் ஒரு சிலருடைய கேரக்டர்கள் ரசிகர்களின் மத்தியில் கவரும் வகையாக வெளியே காட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் பரவி வருகிறது.இதில் பாலியல் குற்ற சாட்டு உள்ள ஒருவர் கலந்து கொள்வது அவ்வளவு நல்லதல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் சஜித் கானின் மீது வந்த தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் சங்கம் (IFTDA) 2018 ஆம் ஆண்டில் ஓராண்டு சஸ்பெண்ட் செய்தது அதுமட்டுமல்லாமல் அவரே புகழ்பெற்ற ஹவுஸ்புல் 4 என்ற இந்தி திரைப்படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகுவதாக 2018-ம் ஆண்டில் அறிவித்திருந்தார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications