பிக்பாஸ் இசைவாணி கன்னத்தில் அறைந்த பூவையார்.. ஷாக் ஆன ரசிகர்கள்
சென்னை: இரண்டு பாடகர்கள் சந்தித்தால் இசை பிரவாகம் எடுக்கும். இங்கே கானா பாடகர்கள் சந்தித்தால் சண்டை
வருகிறது. அதுவும் கானா பாடகி இசைவாணியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தும் தலையில் கொட்டியும் முகத்தில் குத்தியும் செமத்தியாக அடி கொடுத்துள்ளார் சூப்பர் சிங்கர் கானா பாடகர் பூவையார்? ஏன் என்று ஷாக் ஆகிறீர்களா? நடந்த சம்பவங்களைப் விளக்கமாக பார்க்கலாம்.
தி கேஸ்ட்லஸ் சாங் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் இசைவாணி. வட சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் கானா பாடல்களை பாடி புகழ் பெற்றார். ஆண்கள் மட்டுமே கானா பாடல்கள் பாடுவார்கள் என்ற நிலையில் கானா இசைத்துறையில் உச்சத்தை தொட்டுள்ளார் இசைவாணி.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இசைவாணி, அதிலும் சிறப்பாக விளையாடி பிரபலமானார். இதே போல விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ்.

சூப்பர் சிங்கர் பூவையார்
கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த பூவையார் என்கிற நபீஸ் சங்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சென்றார். அத்துடன் இவருக்கு பிகில் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. விஜய் உடன் பாடி நடித்தார்.

மாஸ்டர் படத்தில் பூவையார்
அதனை தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார். மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பூவையார். படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் விஜய் பூவையாரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வரும் காட்சி தியேட்டர்களில் கிளாப்ஸ் அள்ளும்.

இசைவாணி ரீல்ஸ்
கானா பாடகி இசைவாணியுடன் இணைந்து ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தனுஷ் நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் உள்ள பிரபல பாடலான பறக்க பறக்க துடிக்குதே... பழக பழக பிடிக்குதே பாடலுக்கு இசைவாணியுடன் ஆடியுள்ளார் பூவையார். பாட மட்டுமல்ல தங்களுக்கு நன்றாக நடனமாடவும் வரும் என்று இருவரும் நிரூபித்துள்ளனர்.

கன்னத்தில் பளார்
இருவரும் இசை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே கொட்டும் போது ஒரு சத்தம் வந்துச்சா அது ஒரு இசை..என்று இசைவாணியின் தலையில் கொட்டுகிறார். கன்னத்தில் அறைந்து பளார்னு ஒரு சத்தம் வந்துச்சா..அதுவும் இசைதான் என்று சொல்லி மூக்கிலும் ஒரு குத்து குத்துகிறார். எல்லாம் ரீல்ஸ்காகத்தான் என்றாலும் வடிவேல் காமெடியை வைத்து செய்த இந்த ரீல்ஸ் பிரபலமாகியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications