Bigg Boss: பாடகி சித்ரா செய்த செயலை பாருங்க! பிக் பாஸ் போட்டியாளருக்கு வைர மோதிரம்! காரணம் இதுதானாம்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போதெல்லாம் சினிமா உலகில் மிக பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கு. தமிழ்ல மட்டுமில்லாம மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தின்னு பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருது. சமீபத்தில் மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், அதன் வெற்றியாளர் அனுமோலுக்கு நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் தான் இப்போ பேசுபொருளாகியிருக்கு.

சர்ச்சையில் சிக்கிய அனுமோல்
மலையாள பிக் பாஸ் சீசன் 7 இறுதி போட்டியில் அனுமோல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனா, இவருக்கு ஆதரவாகப் பல விமர்சனங்கள் எழுந்தது. அனுமோல் மீது ஏற்கனவே பல விமர்சனங்கள் இருந்த நிலையில்தான் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வெற்றி பெற்ற போது அவர் பிஆர் உதவியோடு தான் வெற்றி பெற்றார் என்று பெரிய குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதேபோலத்தான் அனுமோல் வெற்றியை பற்றியும் அதிகமான விமர்சனங்கள் எழுந்தது.
ஸ்வீட் பன் சாப்பிடும் போட்டி மற்றும் பரிசு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, மலையாள போட்டியாளர்கள் பிரபலமான 'ஸ்டார் சிங்கர்' நிகழ்ச்சியில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டாங்க. அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் மிதுன், பாடகி சித்ராவின் விருப்பமான ஸ்வீட் பன்னை யார் முதலில் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பரிசு இருக்கிறது என்று அறிவிக்கிறார்.

வைர மோதிரம்
இந்தப் போட்டியில் பிக் பாஸ் வெற்றியாளர் அனுமோல் மற்றும் சக போட்டியாளர் நெவின் மோதிக்கொண்டனர். இதில் அனுமோல், ஸ்வீட் பன்னை முழுவதுமாகச் சாப்பிட்டு வெற்றி பெற்றார். பிறகு பரிசு தந்தால் தான் மேடையை விட்டுச் செல்வேன் என்று அவர் அடம் பிடித்ததால், பாடகி சித்ரா அவருக்கு தன் கைகளால் வைர மோதிரத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போ 9-வது சீசனை எட்டியிருக்கு. விஜய் டிவியில் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கின பின்பு, இப்போதைய இரண்டு சீசன்களையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மலையாளப் பிக் பாஸ் சாம்பியனுக்குச் ஸ்வீட் பன் போட்டிக்குக் கூட வைர மோதிரம் பரிசாகக் கிடைத்திருப்பது, ரசிகர்கள் நடுவுல ரொம்ப சுவாரஸ்யமான பேச்சாகியிருக்கு
தமிழில் அதிகமான விமர்சனங்களை பெற்ற திவாகர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அதிலும் அது இது எது நிகழ்ச்சியில் அவர் செய்த ஆர்ப்பாட்டம் அதிகமாக இருந்தது அவரை கலாக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவர் அந்த நிகழ்ச்சியில் கண்டன்ட்டாக மாறிவிட்டார். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனுமோல் நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக போய் அங்கு ஒரு சின்ன போட்டியில் ஜெயித்து வைர மோதிரத்தை வெற்றி பெற்றார் என்று பலர் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications