Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதை மட்டும் செஞ்சிடாதீங்க! கெஞ்சிய அசீம்.. ஆப்பு வைத்த பிக் பாஸ்.. இதை யாரும் எதிர்பார்க்கலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் தான் நடந்து கொண்ட விதத்தை தவறென புரிந்து கொண்டு இதை வெளியே காட்டி விடாதீர்கள் தன்னுடைய பெயர் கெட்டுப் போய்விடும் என்று பிக் பாஸ் இடம் கெஞ்சி இருக்கிறார்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனக்கு எதிராக இருப்பதாகவும் அதனால் தன்னை அழைத்து பிக் பாஸ் பேச வேண்டும் என்று அசீம் கோரிக்கை வைத்தும் பிக் பாஸ் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

 கண்டிக்கும் கமல்

கண்டிக்கும் கமல்

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியலின் கதாநாயகனாக நடித்து வந்த அசீம் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலில் இவர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வந்தாலும் இவருக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாலும் இருந்து வருகிறது. இவர் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் சண்டை போடும்போதும் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகித்து அடிக்கடி கமல் முன்னிலையில் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாலும், இவருடைய ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கொடுத்து வருகின்றனர்.

யாரையும் மதிப்பதில்லை

யாரையும் மதிப்பதில்லை

ரசிகர்களின் பேரும் ஆதரவால் ஒவ்வொரு முறையும் முதல் இடத்தில் சேவ் ஆகி விடுகிறார் அசீம். தொடர்ந்து போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்டாலும் அவருடைய ரசிகர்கள் கெத்தாக அவரை பாதுகாத்து வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர்களிடம் தனக்கு ஆதரவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட அசீம் ஒவ்வொரு வாரமும் புது புது பிரச்சனைகளை கிளப்பி வருகிறார். இந்த வாரத்தில் தலைவராக இருக்கும் பட்சத்தில் விளையாட்டிலும் தான் தலைவர் என்ற கெத்தை அடிக்கடி காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் பழங்குடியினர் மற்றும் ஏலியன்ஸ் இருவர்களுக்கும் போட்டி நடந்து வந்தது. இதில் பழங்குடியினர் அணியில் இருக்கும் அசீம் தன்னுடைய அணியில் இருப்பவர்களையே மதிக்காமல் செயல்படுகிறார் என்று பலரும் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.

கெஞ்சிய அசீம்

கெஞ்சிய அசீம்

கதிரவன் மற்றும் அமுதவாணன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அசீம் உள்ளே சென்று அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்து தள்ளி தன்னை அடி அடி என ஆர்ப்பாட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் இவருக்கு அட்வைஸ் செய்து யாரிடமும் பேசாமல் இருந்த நிலையில் இவர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்து மருத்துவ அறைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். பின்பு தான் செய்த தவறை புரிந்து கொண்டார் போல, அதனாலே கேமரா முன்பு ரகசியமாக தயவுசெய்து இன்று நடந்ததை வெளியே காட்டி விடாதீர்கள் என்னுடைய பெயர் கெட்டுப் போய்விடும் என்று பேசி இருந்தாராம். அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.

மீண்டும் சகஜமாகிவிட்டார்

மீண்டும் சகஜமாகிவிட்டார்

ஆனால் பிக் பாஸ் அதைக் கேட்டுக் கொள்ளாமல் அனைத்தையும் வெளியிட்டு விட்டது. ஆனாலும் அதிகமான ரசிகர்கள் அசீமுக்கு சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள். அசீம் என்ன செய்தாலும் அதை ஆதரிக்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அசீம் தான் உண்மையாக இருக்கிறார் என்பது அவர்களுடைய கருத்தாக இருந்து வருகிறது அசீமை வெறுக்கும் ஒரு சிலர் இது எல்லாமே பெய்டு நபர்கள் தான். பணம் கொடுத்து தான் இவர்கள் இப்படி கூறுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் அசீம், அமுதவாணனிடம் இடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் சகஜமாக தொடங்கி விட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+