Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜனனி பேசும் தமிழ்” குறித்து விக்ரமனின் மீது குற்றச்சாட்டு.. எதிர்பாராமல் வெளியேறுபவர் இவர்தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியில் நீதிமன்ற டாஸ்க்கில் இன்று விக்ரமனின் மீது ஜனனி பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார்.

ஏற்கனவே விக்ரமனின் மீது கோபத்தில் இருக்கும் ஜனனி தன்னுடைய "தமிழ் பிரச்சனை" இருக்கிறது என விக்ரமன் கூறியதாக குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

நீதிமன்ற டாஸ்க்

நீதிமன்ற டாஸ்க்

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 46 ஆவது நாளில் தொடங்கி இருக்கிறது. ஏழாவது வாரத்தை கடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் நீதிமன்ற டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதன்படி பிக் பாஸ் வீடானது நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது. இதில் இதுவரைக்கும் நடந்த நிகழ்வுகளில் தங்களுடைய மனம் கஷ்டப்படும் படி நடந்த நிகழ்வுகளுக்கு வாதாடி தன்னுடைய நியாயத்தை போட்டியாளர்கள் பெரும் நோக்கத்தில் நடந்து வருகிறது.

தீர்ப்பால் ஏற்பட்ட பிரச்சனை

தீர்ப்பால் ஏற்பட்ட பிரச்சனை

நேற்றைய எபிசோட்டில் அசீம், ஏடிகே மீது வழக்கு தொடுத்து இருந்தார். அரசவை டாஸ்க்கில் தான் வேண்டுமென்று சாவியை எடுத்து வைத்துக்கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் நடந்து கொள்ளவில்லை நான் எனக்கு தந்த ரகசிய டாஸ்க்காக தான் அப்படி செயல்பட்டேன் என்று அவர் புகார் கொடுத்திருந்த நிலையில் ஏடிகே சார்பாக விக்ரமன் வாதாடினார். அதே சமயத்தில் அசீமுக்கு ஆதரவாக ஷிவின் வாதாடினார். இருவருடைய தீர்ப்பு வாதாடுதலும் சிறப்பாக அமைந்திருந்தாலும் ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி ராம் அசீமுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கி விட்டார் இது சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிலர் பார்க்கும் சகுனி வேலைகள்

சிலர் பார்க்கும் சகுனி வேலைகள்

இந்த நிலையில் ஏற்கனவே விக்ரமன் மீது அமுதவாணன் முதல் முறையாக ஒரு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் தன்னையும் ஜனனியையும் வில் அம்பு என்று விக்ரமன் எதன் அடிப்படையில் கூறினார் என்று விவாதம் நடந்தது அதில் ஏடிகே விக்ரமன் குற்றம் அற்றவர் என்று தீர்ப்பு வழங்கியிருந்தார். அதனால் அப்போது இருந்தே ஜனனி வருத்தத்தில் இருந்த நிலையில் அதற்கு பிறகு அசீம் மற்றும் அமுதவாணன் என தொடர்ந்து ஒவ்வொருவராக ஜெனனியிடம் விக்கிரமனை பற்றி கோபமூட்டும் விதமாகவே பேசி வந்தனர். இதன் வெளிப்பாடாக ஜனனி இப்போது விக்ரமன் மீது புகார் கொடுத்து இருக்கிறார்.

புகாரும் விளக்கமும்

புகாரும் விளக்கமும்

இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனியின் வக்கீலாக அசீம் வாதாடுகிறார். அதில் உங்கள் "தமிழில் பிரச்சனை போல" என விக்ரமன் ஜனனியை சுட்டி காட்டியது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று கம்ப்ளைன்ட் லெட்டரை படிக்கிறார்.அதற்கு விக்ரமனின் லாயராக இருக்கும் குயின்சி "உங்கள் மொழியில் சிரமம் உள்ளதா" என்று கூறினோம் என தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் விக்ரமன், "அவரது மொழியில் பிரச்சனையே கிடையாது அந்த செந்தமிழ் பேசுவது எனக்கே தடுமாற்றம்" தான் எனக் கூறுகிறார்.

விடாத விவாதங்கள்

விடாத விவாதங்கள்

விக்ரமனை தொடர்ந்து ஜனனியிடம் விசாரிக்கும் போது அவர் "உங்கள் தமிழில்" எனக் கூறியது எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது என ரொம்பவே ஃபீல் பண்ணிய மாதிரி தெரிவிக்கிறார்.அதைத் தொடர்ந்து குயின்சி உங்கள் தமிழ் என்று அங்கே கூற முடியாது. ஏனென்றால், அது டாஸ்க் என்று கூற நீதிபதியாக இருக்கும் மணிகண்டன் தலையை ஆட்டி கொண்டு இருக்கிறார். அடுத்ததாக அசீம், அவர்கள் தமிழ் கிளாஸ் நடக்கும் போதும் தூங்கிட்டாங்க என நினைக்கிறேன் என குயின்சியை கலாய்க்க, எத்தனை முறை கத்தி சொன்னாலும் அது டாஸ்க் டாஸ்க் என உறுதியாகவும் தெளிவாகவும் குயின்சி கூறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய வாக்குகளின் அடிப்படையில் ராம் கடைசி இடத்தில் இருக்கிறார், இன்னும் ஒரு நாள் மட்டுமே ரசிகர்கள் வாக்கு செலுத்த டைம் இருக்கும் நேரத்தில் ராபர்ட் மாஸ்டரும், ராமும் அடிமட்டத்தில் வாக்குகளின் அடிப்படையில் இருப்பதால் இவர்கள் இருவரில் வெளியேறப் போவது யாராக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனாலும் அதிகமாக ராம் வெளி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல்கள் கசிந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+