"முகத்துக்கு மேலே” நாமினேஷன்.. இதை எதிர்பார்க்கலையே! இந்த வாரம் வீட்டுக்கு போக போறவர் இவர்தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர்களுக்கான வித்தியாசமாக நாமினேஷன் நடைபெற்று வருகிறது.
சாப்பாட்டை வேஸ்ட் செய்ய கூடாது என்று சொல்லும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் க்ரீமை முகத்துக்கு மேலே பூசி நாமினேஷன் செய்யப்படுகின்றது. இதை குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.

முகத்தில் அப்பப்படும் கிரீம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று ஐம்பதாவது நாள் தொடங்கி இருக்கிறது. இதற்கான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் வெளியேற்ற பட்டியலுக்கு இரண்டு போட்டியாளர்களின் பெயர்களை நாமினேசன் செய்ய சொல்லி பிக் பாஸ் அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு வித்தியாசமாக இந்த முறை ஓபன் டாஸ்க் வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் இது வழக்கமாக நடப்பதாக இருந்தாலும் இந்த சீசனில் தட்டு நிறைய கிரீமை வைத்து யாரை பிடிக்கவில்லையோ அவர்களுடைய முகத்துக்கு நேராகவே இவர்களைத்தான் நாமினேஷன் செய்ய போகிறோம் என்பதை கூறி அதற்கான காரணத்தையும் கூறி நாமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்களின் முகத்தில் கிரீமை மொத்தமாக அப்பி விடுகிறார்கள்.

அதுதான் காரணமா
கேக்கில் இருக்கும் கிரீம் கூட சில நேரங்களில் பர்த்டே பங்க்ஷன் கொண்டாடும்போதும் சில பங்க்ஷன் கொண்டாட போது முகத்தில் நண்பர்களால் தடவப்பட்டால் அதில் அலர்ஜியானவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். ஆனால் மொத்தமாக ஒரு தட்டு நிறைய கிரீமை வைத்து அதை முகத்தில் அப்புவது சரியா என்று நெட்டிசன்கள் பலரும் கமாண்டுகளில் கலாய்த்து வருகிறார்கள். ஆனாலும் போட்டியாளர்கள் நேற்று எபிசோட்டில் கமல் அனைவரையும் லெப்ட் ரைட் வாங்கியதன் எதிரொலியாக இன்றைய நாமினேஷனில் நடந்து கொள்வது தெளிவாகவே தெரிந்து கொள்ள முடிகிறது.

தொடங்கியது நாமினேஷன்
நேற்று கிடைத்த மோட்டிவேஷன் காரணமாக என்னுடைய விளையாட்டை இனி பாருங்களேன் என இந்த வாரம் போட்டியாளர்கள் செயல்படுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல, இன்றைய முதல் நாளிலே தங்களுடைய விளையாட்டை தொடங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியாளரும் இந்த வாரம் நாமினேசன் செய்வதற்கான காரணத்தை ஏற்கனவே பலமுறை சொன்னதாக இருந்தாலும் இந்த முறை கொஞ்சம் எடுத்துக்காட்டோட கூறி வருகிறார்கள் .முதலில் விக்ரமன் குயின்சி மற்றும் ரட்சிதா என நாமினேஷன் செய்கிறார். அதைத்தொடர்ந்து மணிகண்டன் ரட்சிதா வாய்ஸ் அவுட் பண்ண மாட்டேன் என்கிறார்கள் என்று கூறுகிறார். அடுத்து தனலட்சுமி குயின்சி மற்றும் கதிரவன் என கூறி முகத்தில் கிரீமை தடவுகிறார். அதை தொடர்ந்து அமுதவாணன் கதிரவன் போட்டோ முகத்தை மாற்ற மாட்டேன் என்கிறார் என்று கூறி அவரை நாமினேஷன் செய்கிறார்.

தொடரும் குற்றசாட்டுகள்
இவர்களைத் தொடர்ந்து ஆயிஷா மைனாவை நாமினேஷன் செய்கிறார். அடுத்ததாக கதிரவன் ஜனனி யோட பார்ட்டிசிபேஷன் இன்பிசிபலாக மாறிவிடுகிறதோ என கூறி அவரை நாமினேஷன் செய்கிறார். அசீம் யாராலும் நாமினேஷன் செய்யப்படாமல் இருக்கிறார். அதனால் அவர் தான் இந்த வார வீட்டின் தலைவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் குயின்சி சேப்சோனில் ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் இருக்கிற மாதிரி இருக்கிறது, அதற்கு எடுத்துக்காட்டாக அவருடைய முகத்தில் கிரீம் கூட சரியாக அப்ளை செய்யவில்லை என்று கூறுகிறார் .இந்த பரபரப்பான பிரமோ ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதுபோல சிங்கிய பிரமோவையில் அதிகமானோர் குயின் சி இந்த வாரம் வெளியேற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர் முதல் நாளே இவ்வளவு வெறுப்பை சம்பாதித்து இருக்கும் குயின்சி இந்த வாரம் விளையாட்டின் அடிப்படையில் தொடர்வாரா? வெளியேறுவாராத என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications