மயங்கி விழுந்த ரச்சிதா.. பணத்தை எடுத்த மைனா.. பிக் பாஸ் வீட்டிற்குள் எதிர்பார்க்காத புது பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வார வீக் எண்ட் டாஸ்க் ட்விங்கிள் ட்விங்கிள் பெரிய ஸ்டார் என தலைப்பில் தொடங்கி இருக்கிறது.

போட்டியாளர்கள் விதவிதமாக மேக்கப் போட்டுக் கொண்டு இந்த வாரம் முழுக்க அதே கெட்டப்பில் தங்களுடைய பெர்பாமன்சை காட்ட இருக்கிறார்கள். ஆனாலும் இதில் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்களும் இருக்கின்றது.

யார் மக்கள் ஸ்டார்

யார் மக்கள் ஸ்டார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலரும் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என்று ஒரு தனி அடையாளம் வேண்டும் என்று தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று ரசிகர்கள் மத்தியில் தங்களுடைய அடையாளத்தை காட்டி தங்களுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக புதிய டாஸ்க் தொடங்கி இருக்கிறது. ட்விங்கிள் ட்விங்கிள் பெரிய ஸ்டார் நீங்கள் ஆகப் போறீங்க மக்கள் ஸ்டார் என்று டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் புது வேடம், அவர்களுக்கு கொடுத்த வேடத்தோடு இந்த வாரம் முழுக்க இருந்து தங்களுடைய கேரக்டரின்படி நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று டாஸ்க் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

மைனாக்கு கிடைத்த பணம்

மைனாக்கு கிடைத்த பணம்

அந்த வகையில் இந்த முறை அதிகமாக வடிவேலுவின் ரசிகர்களை கவர்ந்த பல கேரக்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் மைனா நந்தினிக்கு நாய் சேகர், கெட்டப்பில் டான்ஸ் ஆடி 1400 ரூபாய் பெற்று இருக்கிறார். விக்ரமனுக்கு அன்னியன் கெட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ராமிற்கு முதல்வன் ரகுவரன் கெட்டப் கொடுத்து இருக்கிறது. ஜனனி ஸ்டைலிஷ் கெட்டப்பில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க, தனலட்சுமி ப்ரண்ட்ஸ் திரைப்பட நேசமணி கெட்டப்பில் மாறி இருக்கிறார். ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் நடைபெற்றாலும் இந்த சீசனில் இந்த டாக்ஸ்க்கு விறுவிறுப்பாக இருந்து வருகிறது.

எதிர்பார்க்காததாக இருக்குதே

எதிர்பார்க்காததாக இருக்குதே

இதுவரைக்கும் அதிகமாக சண்டை சச்சரவுகளோடு இருந்து வந்த பிக் பாஸ் வீடு கலகலப்பாக மாறி இருக்கிறது. முதல்முறையாக போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை காட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் போது அமைதியாக இருக்கிறார்கள். எதுவே யாரும் எதிர்பார்க்காதது என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இந்த முறை வழக்கறிஞர் வேடம் அசீமுக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் அவர் என்ன மாதிரி செய்யப் போகிறாரோ என்று இப்போது பலர் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

மயக்கம் போட்ட ரச்சிதா

மயக்கம் போட்ட ரச்சிதா

அமுதவாணனுக்கு எம் ஆர் ராதா கெட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் இதே கெட்டப் ராஜுவுக்கு கொடுத்திருந்தது. ராஜு இந்த கெட்டப்போடு வலம் வந்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தார். அதுபோல இன்று அமுதவாணன் கவருவாரா? என்பது குறித்தும் பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். அதுபோல ரச்சிதா சரோஜாதேவி கெட்டப்பில் வளம் வந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய டான்ஸ் போட்டு அவரும் பெர்பாமன்ஸ் பண்ணிக் கொண்டிருக்க அங்கே, ஷிவின் பேய் வேடமிட்டு இருக்கிறார். அவர் திடீர் என ரச்சிதாவின் அருகில் வந்ததும் ரச்சிதா பார்த்து பயந்து போய் மயக்கம் போட்டது போல நடிக்கிறார். இந்த இந்த பிரமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டாஸ்க்கில் அமுதவாணன், ராம் ரகுவரன் கெட்டப்பில் எப்படி பேச வேண்டும் என்பதை குறித்து வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+