Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த புது நபர்.. அசீம் பற்றி கண்டுபிடித்த உண்மை.. வெளியேற காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 93 வது நாளுக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் விஜே பார்வதி சிறப்பு விருந்தினராக அடி எடுத்து வைத்திருக்கிறார்.

சோகத்தில் ஆழ்ந்திருந்த அசீமிடம் அவர் மறைத்து வைத்திருந்த பொருளைப் பற்றி கேட்க அசீம் வெளியேற முடிவெடுக்கிறார்.

மனசை குழப்பி விட்டார்களே

மனசை குழப்பி விட்டார்களே

பிக் பாஸ் நிகழ்ச்சி எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வது போல தான் தற்போதைய ஆறாவது சீசன் இன்னும் முடிவடைய ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டிகள் கடந்த வாரம் முழுக்க டப்பாக இருந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களின் மனநிலையை குழப்பும் வகையில் பல சிறப்பு விருந்தினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வண்ணமாகவே இருக்கின்றனர். நேற்று சுரேஷ் மற்றும் அப்துல் உள்ளே நுழைந்து இதுவரைக்கும் போல்டாகவும் தைரியமாகவும் நான் தான் டைட்டில் ஜெயிப்பேன் என கூறிவந்த அசீமை மனதை மாற்றி இன்று சோகத்தில் ஆள வைத்து விட்டனர்.

ஆரம்பத்திலேயே எதிர்பார்த்ததுதான்

ஆரம்பத்திலேயே எதிர்பார்த்ததுதான்

இந்த வாரம் நடைபெற இருக்கும் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி விட வேண்டும் என்கிற வகையில் போட்டியாளர்களின் மனநிலையை குழப்பும் வகையாக தான் பிக் பாஸ் மன ரீதியாக போட்டியாளர்களை குழப்பும் விருந்தினர்களை அனுப்பி வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு விஜே பார்வதி நுழைந்து இருக்கிறார். விஜே பார்வதி ஏற்கனவே கடந்த வருடம் ஜீ தமிழில் நடைபெற்ற சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களை பாடாய்படுத்தி இருந்தால் இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஆரம்பத்திலேயே கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்.

வர்றது எல்லாம் குழப்பம்தான்

வர்றது எல்லாம் குழப்பம்தான்

ஏற்கனவே ஃப்ரீஸ் டாக்ஸ்கில் வெளியேருந்து வந்த குடும்பத்தினரிடம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் வெளியே தங்களுடைய பெயர் என்ன மாதிரி போய்க்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆர்வமாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர். ஆனால் இந்த முறை வெளியே இருந்து வரும் சிறப்பு விருந்தினர்கள் போட்டியாளர்களின் குறைகளை மட்டுமே கூறி அவர்களை மீண்டும் குழப்பி விடுகிறார்கள். ஏற்கனவே அசீம் ஞாயிற்றுக்கிழமை எபிசொட்டில் கமல் பேசியது மற்றும் சக போட்டியாளர்கள் பேசியதை பார்த்து தன்னுடைய விளையாட்டு முறை தவறாக போய்க்கொண்டிருக்கிறதோ என்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று சுரேஷ் சக்ரவர்த்தி மேலும் குழப்பி இருக்கிறார். அந்த வகையில் இன்று விஜே பார்வதி வந்ததும் வராததுமாக அசீமை கலாய்க்க தொடங்கி இருக்கிறார்.

வம்புக்கு பயப்படற ஆளா இது

வம்புக்கு பயப்படற ஆளா இது

சும்மாவே விஜே பார்வதிக்கு ஒரு மைக் கிடைத்து விட்டால் எதிரே இருப்பவர்களை தெறிக்க விடும் வகையில் கேள்வி கேட்டு தொலைத்து விடுவார். இந்த முறை அவருக்கு சிறப்பாக அங்கீகாரத்தோடு மைக் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள்ளே கெஸ்ட் ஆக நுழைந்திருக்கும் நேரத்தில் அவருடைய கேள்விக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கப் போகிறது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் ஒரு சுவாரஸ்யமா ரெண்டு சுவாரசியமா எல்லாத்தையும் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பேசப் போகிறோம் என்று பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் விஜே பார்வதியை அனைவரும் வரவேற்க நேரடியாக பெட்ரூம் சென்று அசீம் பெட்டுக்கு அடியில் சென்று செக் பண்ணி பார்க்க அங்கே இரண்டு ஆரஞ்சு பழம் இருக்க, இன்னைக்கு ஒரு சண்டை இருக்க போகுது என்று பேசிக் கொண்டிருக்கும் வி ஜே பார்வதியை பார்த்து லுங்கி கட்டி இருக்கும் அசீம் நமக்கு எதுக்கு வேண்டாத பிரச்சனை என்கிற மாதிரி வெளியே செல்ல, நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க என்ன வெளியே போறீங்க என விஜே பார்வதி அசீமை வம்பு இழுக்க, என்ன இப்போ சண்டை இழுக்கணுமா? என்று கேட்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் விஜே பார்வதி இடம் பேசி எதற்காக நம்முடைய எனர்ஜியை வேஸ்ட் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் அசீம் வெளியே கிளம்பி இருப்பார். மத்தபடி அவர் எந்த பிரச்சனைக்கும் பயப்பட மாட்டார் என்று சப்போர்ட் பண்ணி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+