தனலட்சுமி மறைந்திருக்கும் ரகசியம்..போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி..பிக் பாஸின் பிளான்? கசிந்த தகவல்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி தற்போது சீக்ரெட் ரூமில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி இப்ப வரைக்கும் எந்த டிவி நிகழ்ச்சிகளுக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்து வருகிறார்.
ப்ரீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவருமே தனலட்சுமியை அதிகமாக தேடி வருகின்றனர்.

எதிர்பாராத வெளியேற்றம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 81வது நாளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சியே முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே கடந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி எவிக்ஷன் சரியானது அல்ல அவர் இன்னும் கடைசி வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்திருக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் எந்த வீடியோவையும் வெளியிடாமல் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனலட்சுமி வெளியேறியதும் அவர் வெளியிட்ட வீடியோ என்று வெளியான வீடியோக்கள் அனைத்துமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு தனலட்சுமி வெளியிட்ட வீடியோக்கள் தான். பழைய வீடியோவை தான் சிலர் புது வீடியோ என்று கூறி பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதை செய்யவில்லையே
ஒவ்வொரு போட்டியாளர்களும் வெளியேறியதும் அடுத்த திங்கள் கிழமை டிஸ்னி ஹாட் ஸ்டாரில் லைவ் வந்துவிடுவார். ஆனால் தனலட்சுமி அப்படி செய்யவில்லை. அது ரசிகர்களின் மத்தியில் கேள்வியை எழுப்பி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் பல சேனல்களுக்கும் தொடர்ச்சியாக அனைத்து போட்டியாளர்களும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் வெளிநாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்கள் கூட இதைத்தான் செய்திருக்கின்றனர். ஆனால் தனலட்சுமி இதை செய்யவில்லையே என்று பலர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.

அனைவரின் கேள்வி
அதுமட்டுமல்லாமல் தற்போது நடந்து வரும் ப்ரீஸ் டாஸ்க்கில் தனலட்சுமி இல்லையே என்று அவருடைய ரசிகர்கள் அதிகமாக ஃபீல் பண்ணுகின்றனர். காரணம் தன்னுடைய அம்மாவை கூட்டி வந்து விட வேண்டும் என்று தனலட்சுமி அதிகமாக ஆசைப்பட்டு கொண்டிருந்தார் ஆனால் அவர் ஆசைப்பட்டது நடக்கவில்லையே என்றுதான், அது போல உள்ளே இருக்கும் ஒன்பது போட்டியாளர்களில் இப்போது வரைக்கும் ஏழு எட்டு போட்டியாளர்களின் உறவினர்கள் வந்துவிட்டனர். அனைவருமே சொல்லும் ஒரே வார்த்தையாக தனலட்சுமி நன்றாக விளையாடினார் என்றுதான் அதுபோல அவருடைய வெளியேற்றத்தையும் பற்றியும் அனைவருமே கருத்து கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தனலட்சுமி இந்த வாரம் கமல் முன்னிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.

நடக்க வாய்ப்பிருக்கிறது
இதற்கு முந்தைய சீசன்களில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் சில போட்டியாளர்கள் சீக்ரெட் ரூமில் வைக்கப்படுவர். அதுபோல தற்போது தனலட்சுமி வீட்டிற்கு அனுப்பப்படாமல் சீக்ரெட் ரூமில் இருக்கப்படுகிறார். அவர் இந்த ஒரு வாரம் விளையாட்டை முழுக்க பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். வார இறுதியில் மீண்டும் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வர இருக்கிறார். இது சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்திலும் விளையாட்டின் தன்மையை மாற்றி அமைக்கும் விதத்திலும் இருக்கப் போகிறது என்று தகவல்கள் பரவி வருகிறது.இந்த நிலையில் இந்த தகவலை இன்னும் விஜய் டிவி அணியினர் உறுதி செய்யாத வகையில் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் மாற்றங்கள் ஏற்படலாம் ஆனால் ரசிகர்கள் சொல்வதும் ஒரு விதத்தில் ஒத்துப் போவது போல தான் இருக்கிறது. ஆனாலும் பொருத்திருந்து பார்த்தால் தெரியும் எது உண்மை என்பது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications