என் மனைவி அந்த வார்த்தையை மட்டும் சொன்னால்...நான் சுற்றி சுற்றி வருவேன்.. ஜி.பி முத்து நெகிழ்ச்சி
சென்னை: பிக் பாஸ் சீசன் ஆறில் போட்டியாளராக இருக்கும் ஜி பி முத்து தன்னுடைய குடும்பத்தை பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
குடும்பத்தை மிஸ் பண்ணுவதாக பேசி வந்த ஜி பி முத்து தன்னுடைய மனைவியை குறித்து பேசியதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சமூக வலைதளத்தில் பிரபலமானவர்
பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது புது போட்டியாளர்களுடன் ஒரு வாரம் முடிவடைந்து இருக்கின்றது. இந்த நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஒரு சிலர் தங்களுடைய சுய கேரக்டரை காண்பிக்க ஆரம்பித்து விட்டனர் .இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் இப்போது இருந்து வருகின்றனர். இதில் ரசிகர்களில் அதிகமாக ஆதரவு கொடுக்கும் ஒரு போட்டியாளராக ஜிபி முத்து இருந்து வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர்தான்.

மீம்ஸ் கிரியேட்டர்களின் கண்டன்ட்
டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து தன்னுடைய வெள்ளந்தியான பேச்சு மூலமாக பலருடைய மனதை கவர்ந்து விட்டார். இவரை கலாய்க்கும் பேப்பர் ஐடிகளை இவர் கலாய்த்து திட்டுவதை பார்த்து இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். பேப்பர் ஐடி என்று இவர் "அவனே இவனே" என கண்டமேனிக்கு பேசி பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், ஜி பி முத்துவின் வீடியோக்களும் போட்டோக்களும் மீம்ஸ் கிரியேட்டர்களின் கன்டென்ட் ஆக தன் இருந்து வருகிறது.

இது வரைக்கும் இல்லையாம்
பிக் பாஸ் வீட்டில் ஜி பி முத்துவிடம் நேற்றைய எபிசோடில் இரவு போட்டியாளர்கள் நீங்கள் உங்கள் மனைவியிடம் ஐ லவ் யூ என்று சொல்லி இருக்கீங்களா? என்று கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். அதற்கு அவர் நான் என் மனைவியிடம் இதுவரைக்கும் ஒரு தடவை கூட அப்படி சொன்னது இல்லை. அதுபோல என் மனைவியும் என்னை அப்படி சொன்னது கிடையாது. அவர் என்னை மாமா என்று கூப்பிடுவதற்கு ரொம்ப வெட்கப்படுவார் என்று சொல்லுகிறார். உடனே மைனா நந்தினி அப்போ சீக்கிரமா இதற்கு ரெடி பண்ணிடலாம் என்று கூறுகிறார் .

ஒரு வார்த்தை போதும்
ஜிபி முத்து அடிக்கடி தன்னுடைய மனைவியோடு பல ரீல்ஸ் வீடியோக்களில் தன்னுடைய காதலை வெளிக்காட்டி வருவார். ஜி பி முத்துவின் மனைவியை குறித்து டிக் டாக் பிரபலமான சூர்யா பேசியதற்கு ஜி பி முத்து சமூக வலைத்தளத்தில் பெரும் சண்டை கலவரத்தை செய்திருந்தார் .இந்த நிலையில் என்னுடைய மனைவி என்னிடம் ஐ லவ் யூ என்று சொன்னால் நான் பத்து முறை சுற்றி வருவேன். வெளியே சென்றதும் என்னுடைய மனைவியிடம் நான் ஐ லவ் யூ சொல்லுவேன் என்று கூறிய அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் பலரும ஜி பி முத்துவுக்கு வாழ்த்துக்கள் கூறியும் கலாய்த்தும் மீம்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications