பிக்பாஸ் 6:"பாலா”வை குறித்து குழப்பமாக பேசிய ஜிபி முத்து ..இது கூட தெரியாமல்..பச்ச மண்ணாக இருக்காரே
சென்னை: 'பாலா' பெயர் குழப்பத்தால் ஏற்பட்ட நகைச்சுவை உரையாடலை சுட்டிக்காட்டி, "பாருங்க.. எங்க தலைவரோட வெகுளித்தனத்தை.. எங்க செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.. என்று ஜி.பி முத்து ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பல முன்னேற்பாடுகள்லோடு தயாராக வரும் போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டில் மண்ணை கவ்வும் போது ஜி.பி முத்து என்ன செய்யப் போகிறார!?என்று பலர் ஆவலுடன் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.

எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போன சீசனில் இருந்தே ஆர்வமுடன் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் ஜி.பி முத்து. தன்னால் போன் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறிக் கொண்டிருந்தவரை ஒருவழியாக சம்மதிக்க வைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக அனுப்பியது பிக் பாஸ் நிகழ்ச்சி குழு. ஜி.பி முத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே அவரைப் பற்றிய மீம்ஸ் களும் கலாய்ப்புகளும் இணையத்தை ஆக்கிரமிக்க துவங்கி விட்டன.

பிக்பாஸ் வீட்டில் ஆதரவு
வழக்கம்போல் தன் மனம் போன போக்கில் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு பவுடர் சீப்பு சகிதமாக பிக் பாஸ் வீட்டிற்குள் சுற்றி வரும் ஜி.பி முத்து சக போட்டியாளர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றுள்ளார். மீன் குழம்பு சாப்பாடு இல்லாமல் தான் இதுவரை இருந்ததில்லை எனக் கூறியுள்ள ஜி.பி முத்துவிற்கு இன்று சுவையான மீன் குழம்பு பிக் பாஸ் வீட்டில் தங்கையாக இருக்கும் சிவின் வைத்துக் கொடுக்க நெகிழ்ச்சியுடன் அவருக்கு தன் நன்றியை கூறினார் ஜி.பி முத்து. அதைத் தொடர்ந்து நடந்தது தான் காமெடியே!!

பாலா பெயர் குழப்பம்
இதற்கு முன்பு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பாலா தான் தனக்கு ஃபேவரைட் ஆன போட்டியாளர் என்று சீரியல் நடிகையும் டான்ஸ் மாஸ்டர் ஆன சாந்தி கூறியதற்கு,தனக்கும் பாலாவை பிடிக்கும் என்றும் ஆனால் அந்த பாலாவிற்கு வாழ்க்கையை உருவாக்கி கொடுத்ததே அமுதவாணன் தான் என்று அமுதவாணனை பாராட்டி பேச அதை கேட்டுக் கொண்ட அமுதவாணன் சிரித்துக் கொண்டே எல்லாம் சரிதான் ஆனால் அந்த பாலா இந்த பாலா இல்லை என்று கூற ஜி.பி முத்து குழம்பிப் போனார்.

தலைவரே அவர் இவரு இல்லை
சாந்தி கூறியது இதற்கு முந்தைய சீசனில் போட்டியாளராக களம் இறங்கிய பாலாஜி முருகதாஸ் எனவும், தனது நண்பர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் பாலா என்று தெளிவுபடுத்த தனக்கே உரிய அக்மார்க் வெகுளித்தனத்துடன் தனக்கு மற்ற போட்டியாளர்களை பற்றி தெரியாது என்றும் தனக்குத் தெரிந்தது கே பி ஒய் பாலா மட்டுமே என்று ஜிபி முத்து சொன்னதை கேட்டு சக ஹவுஸ்மேட்டுகள் குலுங்கி குலுங்கி சிரித்ததோடு மட்டுமன்றி, ஜி.பி முத்துவை கலாய்த்தும் உள்ளதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications