
பழையதை மறக்காமல் ஜிபி முத்து செய்த செயல்... என்ன மனுஷன்யா! இப்படி ஒரு நண்பர் கிடைக்க வேண்டும்
சென்னை: சமூக வலைத்தளத்தின் மூலமாக பலருக்கும் தெரிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து, பின்பு வெளியே வந்த பிறகு ஜி பி முத்து செய்த செயல் ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
எல்லாரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஜி பி முத்துவின் வாழ்க்கையில் அதிகமாக அழ வைத்த நண்பரின் மறைவு நாளில் நண்பரை நினைத்து உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.
என்னாது தலைவன் ஜி.பி. முத்து கைது செய்யப்பட்டாரா?.. என்ன தவறு செய்தார்?.. ரசிகர்கள் கொந்தளிப்பு

பஞ்சமில்லாத கமெண்ட்கள்
ஜி பி முத்து,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருடைய ஃபேவரைட் நபராக இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் பலரையும் சிரிக்க வைக்கும் விதமாகவே இவருடைய வீடியோக்கள் அதிகமாக இருந்து வருகிறது. இவர் பலரையும் திட்டி வீடியோ வெளியிட்டாலும் அதையும் அதிகமானோர் ரசித்து வருகிறார்கள். அதை பலர் கலாய்த்துதான் கொண்டிருப்பார்கள். தன்னை பற்றி கலாய்ப்பவர்களை இவரும் அசராமல் மீண்டும் மீண்டும் கலாய்த்து வருவார். அதைப் பார்க்க ஒரு கூட்டம் இவர் வீடியோ வெளியிட்டதுமே அதை மொய்த்து கொண்டிருக்கும் கமெண்ட்களும் பஞ்சமில்லாமல் இவருக்கு குவிந்து விடும்.

எதிர்பார்க்காத வெளியேற்றம்
ஜி பி முத்துக்கு அதிகமாக இரட்டை அர்த்தத்தில் உள்ள கமெண்ட்களும் திட்டி தீர்க்கும் கமண்டுகளும் இருந்தாலும், அவர் அதை கண்டு கொள்வதே இல்லை. இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்கிறார் என்று சொன்னதுமே இந்த நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்றும் நிகழ்ச்சி இனி வேற லெவலில் இருக்கும் என்றும் இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட இதை பார்த்து வந்தனர். ஆனால் திடீரென இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார்.

நெகிழ்ச்சியான செயல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் தவம் கிடக்கும் நேரத்தில் இவர் கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டு வந்து விட்டாரே என்று அதிகமானோர் இவர் மீது கோபத்தில் திட்டி வருகிறார்கள் ஆனாலும் இவர் வெளியே வந்த பிறகு வழக்கம்போல வீடியோக்களை வெளியிட்டு கொண்டும், ஒரு சில திரைப்படங்களில் புதியதாக நடித்துக் கொண்டும் இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்த நண்பரின் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் வீட்டிலேயே அவரை சாமி ஆக கும்பிட்டு இருக்கிறார்.

மாறாத நட்பு
கடந்த வருடம் இவருடைய நண்பரின் இறப்பின் போது கூட சமூக வலைத்தள பக்கங்களில் நான் எல்லோரையும் சிரிக்க வைக்கிறேன், ஆனால் கடவுள் என்னை அழ வைத்துவிட்டான். கடவுளே இல்லை என்று திட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு பிறகு ஒரு சில நாட்களாக என்னை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் கூறியிருந்தார். அதுபோல ஒரு சில நாட்களாக வீடியோக்களும் எதுவும் வெளியிடாமல் இருந்து வந்தார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட தன்னுடைய நண்பரை பற்றி மனம் உருகி பேசி இருந்தார். தன்னுடைய காரில் முதல் ஆளாக அவரைத்தான் கூப்பிட்டு சென்றதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தான் ஆரம்ப காலத்தில் அதிகமாக கஷ்டத்தில் இருந்த போதும் தனக்கு உறுதுணையாக இருந்ததே அவர்ந்தார் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய நண்பர் மறைந்த நாளில் இவர் செய்த செயலை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.