"தப்பு தட்டிக்கேட்க தானே நாம இருக்கோம்” ஆண்டவரின் சரவெடி... சிதற போவது..? இப்படி மாட்டிக்கிட்டாரே!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் இன்று சனிக்கிழமை முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் தப்பை தட்டி கேட்க தானே நாம் இருப்போம் என்று மிரட்டலாக பேசியிருக்கிறார்.
தப்புத் தப்பா எந்த வாரம் பல பிரச்சனைகள் நடந்த நிலையில் கமல்ஹாசன் எந்த தப்பை தட்டிக் கேட்கப் போகிறாரோ என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.
ப்ரோமோ வில் மட்டும் இவ்வளவு பில்டப் கொடுத்துவிட்டு நிகழ்ச்சியில் எதுவும் இல்லாமல் செய்து விடக்கூடாது. அப்படியே அசீம் மற்றும் ஜிபி முத்து பிரச்சினையை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று பலர் அப்ளிகேஷன் கொடுத்து வருகிறார்கள்.

ஆரம்பமே அதிரடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த சீசன் இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் வாரத்திலே மோசமான வார்த்தைகளால் லைவ் நிகழ்ச்சியில் சண்டை போட்டு போட்டியாளர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். இதில் யார் சரி? யார் தவறு? என்று சொல்ல முடியாத அளவில் தான் போட்டியாளர்கள் பலர் நடந்து வருகின்றனர். ஆரம்பத்தில் பவ்யமாக தெரிந்த பல போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்குள் தங்களுடைய சுய கேரக்டரை காட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

முந்தைய சீசனின் தாக்கம்
இந்த நிலையில் ஒரு சிலர் தங்களை முந்தைய சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் சில செய்கைகளால் பிரபலமடைந்த போட்டியாளர்களை, மீண்டும் நினைவில் வைத்துக் கொண்டு அவர்களை அப்படியே காப்பி அடிப்பது போலவும் செய்து வருகிறார்கள். அவர்களையே ரசித்த ரசிகர்கள் நம்மளை ரசிக்க மாட்டார்களா? என்று சொல்லும் விதமாகத்தான் சில போட்டியாளர்களின் செயல்கள் இருந்து வருகிறது. குறிப்பாக அசீம் இதற்கு முந்தைய சீசனில் கலந்து கொண்ட பாலா மற்றும் அபிஷேக்கை போல செயல்பட்டு வருவதாகவும், விக்ரமன் இதற்கு முந்தைய சீசன் ஆரியைப் போல செயல்பட்டு வருவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் .இதனால் பல நேரங்களில் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை நினைத்து காண்டாகி வருகிறார்கள்.

ப்ரோமோ பில்டப்
இதனால் இந்த வாரம் கமல் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசினால் நல்லா இருக்கும் என்று சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று கமலும் இன்றய முதல் ப்ரோமோவில் படபடவென மிரட்டலாக சரவெடியை வெடித்துக் கொண்டிருக்கிறார். இது எல்லாம் எடுபடுமா? இல்லை தீபாவளி நேரத்தில் மழை பெய்து கொண்டிருப்பதால் அப்படியே நமக்கு போய்விடுமா? என்பது இன்றைய எபிசோட்டில் தெரியும். தப்பு பண்றவங்களுக்கு தான் செய்றது தப்பு என்று தெரியாதவர்களுக்கு தட்டிக் கேட்க தானே நாம இருக்கோம் என்று கமல் கூறுவதைப் பார்த்து நிகழ்ச்சிக்கு ஆர்வம் கூடி இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மாட்டப் போவது யார்
இந்த வாரம் ஜி பி முத்து வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று கூறிக் கொண்டிருக்கும் போது, பிக் பாஸ் எவ்வளவோ சமாதானம் கூறியும் எடுபடவில்லை. ஆனால் இன்று கமல் என்ன சமாதானம் சொல்லி ஜி பி முத்து இருக்கப் போகிறாரா? இல்லை வெளியேறப் போகிறாரா? என்று ஒரு பக்கம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே நேரத்தில் நேற்று எபிசோட்டில் அசீம் சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்டது குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதை குறித்து பேசப் போகிறார்களா? அல்லது அசல் கோளாறு பல பெண் போட்டியாளர்களை தடவிக் கொண்டிருப்பதை குறித்து பேச போகிறாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருப்பதாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications