பிக் பாஸ் 6: “ நான் பேசும் ஸ்டைல் தப்பா” கதறும் ஆயிஷா... இப்படியா எல்லோரும் டார்கெட் பண்ணுவாங்க!!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் இன்றைய முதல் ப்ரோமோவில் ஜனனியின் பேச்சைக் கேட்டு ஆயிஷா கதறிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே நேற்று அசல் கோளாருடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இன்று ஜனனி பேசி இருப்பது ஆயிஷாவை அதிகமாக பாதித்திருக்கிறது
போட்டியாளர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே பிக் பாஸ் தற்போது பக்காவாக பிளான் போட்டு புது டாஸ்க் வைத்துள்ளது.

பிக் பாஸ் கொடுத்த புது டாஸ்க்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் மூன்றாவது நாள் தொடங்கி இருக்கின்றது. இன்றைய முதல் ப்ரோமோவில் ஆயிஷா கதறிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது நீங்கள் இங்கே இருக்கும் போட்டியாளர்களுடன் பழகிய ஒரு சில நாட்களுக்குள் யாருடன் நட்பை தொடர விரும்புகிறீர்கள். யாரிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறீர்கள் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ஜனனியின் கருத்து
அதில் இன்று ஜனனி நான் ஆயிஷாவிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் ஏனென்றால் பிறகு அவருக்கும் எனக்கும் சண்டை வரலாம் என்று கூறுகிறார். ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆயிஷா நான் அப்படி உன்னை நினைக்கலை என்று கூறுகிறார். அதற்கு ஜனனி நான் பேசுவது உனக்கு பிடிக்கலையா என்று கேட்கிறார். அப்போது ஆயிஷா நான் தயவு செய்து எல்லோர்கிட்டயும் ஒன்று தெளிவுபடுத்துகிறேன். நான் பேசும் டப்பிங் ஸ்டைல் வந்து தப்பா இருக்கும் என்று நான் ஃபீல் பண்றேன். எல்லார்கிட்டயும் விளக்கமும் கொடுக்கிறேன் என்று கூறுகிறார். அப்போது அங்கே இருந்த விஜே மகேஸ்வரி உன் ஸ்டைல் எங்களுக்கு தப்பா தெரியல என்று கூறுகிறார்.

கதறும் ஆயிஷா
இல்லை நான் என்னோட கடமைக்கு எல்லோர் கிட்டயும் சொல்லுகிறேன் என்று குழப்பத்திலும் வெறுப்பிலும் ஆயிஷா பேசுகிறார். ஆயிஷா பீல் பண்ணுவதை பார்த்து சக போட்டியாளர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். சரி ஓகே இதை விடு என்று விஜே மகேஸ்வரி கூறுகிறார். அப்போது ஓகே நான் எதுவும் பேசல என்னை விட்ருங்க என்று ஆயிஷா கத்துகிறார். ஜனனி என்ன பேசுவது என்று தெரியாமல் தலையை குனிந்த படி யோசித்துக் கொண்டிருக்கிறார்.

தொடரும் கருத்து வேறுபாடு
ஏற்கனவே நேற்று ஆயிஷாவிடம் அசல் கோளார், நீங்க என்னிடம் வாடா போடா என்று பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என்று முகத்துக்கு நேராக பேசியிருந்தார். அதற்கு ஆயிஷாவும் நான் உங்களிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தானே அப்படி பேசினேன் என்று கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அசல் கோளார் பலர் முன்னிலையில் நீங்கள் என்னை இப்படி அழைப்பது எனக்கு வருத்தமாகவும் ஒரு மாதிரி இருக்கிறது என்று தெளிவு கொடுத்து இருந்தார். இனி நான் அப்படி கூற பேசமாட்டேன் என்று ஆயிஷா அப்போதே கூறிட்டார். இந்த நிலையில் நேற்று முழுக்க ஜனனி ஆயிஷா உடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்துவிட்டு இன்று ஆயிஷா உடன் இருந்தால் தனக்கு சண்டை வரும் என்று பேசி இருப்பது ஆயிஷாவின் ரசிகர்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications