காதலி அனுப்பிய பொருளால் புலம்பும் ராபர்ட் மாஸ்டர்.. பிக் பாஸ் உள்ளே இப்படி ஒரு ரகசியங்கள் நடக்குதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய காதலி கொடுத்து அனுப்பிய பொருளை பார்த்து புலம்பி கொண்டிருக்கிறார்.

ராபர்ட் மாஸ்டரின் காதலி கொடுத்த பொருளை ரகசியமாக பிக் பாஸ் ராபர்ட் மாஸ்டரிடம் சேர்த்து இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் எந்த பொருளும் அவ்வளவு சுலபமாக கொண்டு செல்ல முடியாது என்று பலரும் கூறிக் கொண்டிருக்கும்போது ராபர்ட் மாஸ்டருக்கு மட்டும் எப்படி தனி சலுகை கிடைத்திருக்கிறதா என்று பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

பல கட்ட சோதனைகள் இருக்காம்

பல கட்ட சோதனைகள் இருக்காம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 43 வது நாள் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இதில் டான்ஸ் மாஸ்டர் ஆக அறிமுகமாகி இருக்கும் ராபர்ட் மாஸ்டர் தற்போது குயின்சியிடம் புலம்பி கொண்டிருக்கிறார். இது ரசிகர்களிடம் காட்டாத பல வேலைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து வருவதை வெளிப்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற பிறகு பிக் பாஸ் அணியினர் பொருட்களை சோதனை இட்டு தான் ஒவ்வொன்றாக அனுப்பி கொண்டிருக்கின்றனர். போட்டியாளர்கள் பயன்படுத்தும் உடை முதல் அன்றாட தேவையான பொருள்கள் வரை பிக் பாஸ் ஒவ்வொன்றாக தான் அனுப்பி கொண்டிருக்கிறது .இதனால்தான் சில போட்டியாளர்கள் தங்களுடைய பொருள்கள் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஆரம்பமான ஒரு சில நாட்களில் ஜிபி முத்து தன்னுடைய உடைகள் எதுவும் வரவில்லையே என்று அடிக்கடி கேமரா முன்பு பேசிக் கொண்டிருந்தார்.

வெளியே ஏற்கனவே ஒரு காதலி

வெளியே ஏற்கனவே ஒரு காதலி

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரட்சிதா மகாலட்சுமியுடன் ஒரு மார்க்கமாக பழகி வருகிறார் என்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எல்லா போட்டியாளர்களை விடவும் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வதும், இவர்கள் இருவரை பற்றியும் போட்டியாளர்கள் அடிக்கடி கலாய்த்து வருவதும் வெளியே தெரிந்து வருகிறது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே தனக்கு ஒரு காதலி இருக்கிறார் என்றும் அவர் வயதில் குறைவானவர் .அவருக்கு இப்போதுதான் 22 வயது ஆகிறது என்று ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் கூறியிருந்தார். ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்ட ராபர்ட் மாஸ்டர் அவருடைய மனைவி பிரிந்துவிட்ட நிலையில் தன்னுடைய மகள் தன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டதாக கதை சொல்லும் டாஸ்க்கில் கூறியிருந்தார்.

புலம்ப வச்சுட்டாங்களே

புலம்ப வச்சுட்டாங்களே

ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டரின் காதல் கதையை வைத்து ஆயிஷா கலாய்த்ததாக கூறி அவரிடம் முகத்துக்கு நேராகவே ராபர்ட் மாஸ்டர் சண்டையிட்டு இருந்தார். இந்த நிலையில் அப்போ எதற்கு ரட்சிதாவுடன் இவர் இப்படி பழகி வருகிறார் என்பது பலருக்கும் தெரியாத கேள்வியாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராபர்ட் மாஸ்டர் குயின்சி இடம் நான் விளையாடுவது ஏதோ தவறாக வெளியே போய்க்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் எனக் கூற குயின்ஸி என்ன ஆச்சு என கேட்கிறார்.

இதில் எது உண்மை

இதில் எது உண்மை

நான் எனது காதலிக்கு வாங்கி கொடுத்த மோதிரம் இப்போ என்னுடைய பெட்டில் இருக்கிறது. எப்படி வந்தது தெரியவில்லை எதற்காக அவர் கொடுத்து விட்டாள் என்றும் தெரியவில்லை. என் மீது கோபத்தில் கொடுத்து இருக்கிறாளா? அல்லது நான் இருக்கிறேன் என்று ஆறுதலாக கொடுத்து இருக்கிறாளா? என தெரியவில்லையே என்று புலம்பி கொண்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இதில் எது உண்மை யான முகம் .ராபர்ட் மாஸ்டருக்கு உண்மையிலேயே காதலி இருக்கிறாரா? அல்லது இவர் நடிக்கிறாரா? என்று தெரியவில்லையே எனவும் சிலர் கருத்து கூறி வருகின்றனர். ஏற்கனவே நேற்றைய எபிசோடில் ரட்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமினேஷன் செய்திருந்தார். இதுவே பலருக்கும் வியப்பாக இருக்கும் நிலையில் இன்று ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய காதலியை நினைத்து புலம்புவதை பார்க்கும் போது குழப்பமாக இருக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+