அசீம் செய்த தப்பை நான் தான் கண்டுபிடித்தேன்.. நான் சகுனியா? பல ரகசியங்களையும் கூறிய ஷிவின்
அசீம் செய்த தவறுகளை நான் கண்டுபிடித்ததால் நான் சகுனியா? என்று ஷிவின் முதல் முறையாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஷிவினை நெட்டிசன்கள் பலர் சகுனி என்று அழைத்து வருவது குறித்து முதல் முறையாக ஷிவின் பதில் கொடுத்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசியங்களுக்காக ஷிவின் பல வேலைகளை செய்து அது லாஸ்டில் சண்டை சச்சரவாக மாறி இருந்தது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் செய்த பல செயல்களை நான் கண்டுபிடித்ததால் தான் என்னை ரசிகர்கள் சகுனி என்று கூறுகிறார்கள் என்று ஷிவின் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நெட்டிசன்கள் கலாய்ப்பு
விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளராக அறிமுகமான ஷிவின் கணேசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்காக பல்வேறு செயல்களை செய்து வந்தார். ஷிவின் கணேஷ் இதுவரைக்கும் திருநங்கைகளின் மீது இருந்த சமூகத்தின் பார்வையை மாற்றி தனக்கென்று தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் தான். இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கவில்லையே என்று அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அசீமுடைய ரசிகர்கள் ஷிவினை சகுனி என்று கலாய்த்து வருகிறார்கள்.

அதுதான் வேதனை
அதை குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக ஷிவின் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் பலர் என்னை சகுனி என்று கூறுகிறார்கள். நான் அசீம் செய்த ஒவ்வொரு செயலையும் கண்டுபிடித்து கூறினேன். அதனால்தான் இவர்கள் என்னை இப்படி சொல்கிறார்களா? அசீம் மேக்கப் போடும்போது நான் தான் கண்டுபிடித்து கூறினேன். ஆனால் தப்பு செய்த அவர் மீது குறை சொல்லவில்லை கண்டுபிடித்த என்னை குறை கூறுகிறார்கள்.
அசீம் அடுத்தவர்களை பர்சனல் அட்டாக் செய்ததை மறந்துவிட்டார்கள்? அதை தப்பு என்று பேசியது தவறு என்று பலர் பேசுவது தான் வேதனையாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

சைக்கிள் டாஸ்க் பிரச்சனை
அது மட்டுமல்லாமல் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் சைக்கிள் ஓட்டும் போது அசீம் தான் சகுனி வேலை பார்த்தது. ரூல்ஸ் உடைத்து நாம் இரண்டு பேரும் மட்டும் சைக்கிள் ஓட்டுவோம் என்று கூறியது அசீம் தான். நான் கண்டுபிடித்து நாம் ஐந்து பேரும் மாற்றி மாற்றி சைக்கிள் ஓட்டுவோம் என்று கூறினேன். அந்தப் பத்து மினிட்ஸ்க்குள்ள ஏறாமல் போனது அவருடைய மிஸ்டேக். ஆனால் மிஸ்டேக் அப்படி என்றும் சொல்ல முடியாது. அது அவருக்கு சரியாக அமையவில்லை அவர் சரியாக ஏறாமல் போனதற்கு நான் சகுனி என்று கூறுகிறார்கள்.

அப்போ யார் சகுனி
அது மட்டுமல்லாமல் அசீம் மேக்கப் போட்டு நான் கண்டுபிடித்து சொன்னேன் என்று பலர் இப்போ வரைக்கும் திட்டி வருகிறார். வெளியே வந்து நான் பார்த்த பிறகு தான் எனக்கே தெரிந்தது அவர் முகத்தை கழுவி விட்டு உள்ளே வந்தது. அப்போது கூட பிக்பாஸ் தெளிவாக கூறியிருந்தார் .இனி நீங்கள் தொடர்ந்து இதை செய்றதாக இருந்தால் செய்யுங்கள் இல்லை என்றால் செய்யாமல் விட்டு விடுங்கள் என்று ஆனால் தப்பு செய்ததை மறந்து விட்டார்கள் அதை கண்டுபிடித்ததனால் நான் சகுனி என்று பலர் குறிப்பிட்டு வருகிறார்கள் என்று தன் தரப்பு நியாயத்தை ஷிவின் கூறி இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications