"நடுநிலைத் தவறவில்லை” விக்ரமனை போலவே பேசிய அவருடைய சகோதரி.. குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து இருக்கிறது.

இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிகமான ரசிகர்கள் விக்ரமன் ஜெயிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் விக்கிரமன் ரன்னராக தேர்வாகி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது என்று கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விக்ரமனின் சகோதரி விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் அவர் எந்த இடத்திலும் நடுநிலை தவறாத ஒரு நபராக இருப்பதால் என்னுடைய அண்ணனை பற்றி எனக்கு மேலும் பெருமையாக இருக்கிறது என பல நெகிழ்ச்சியான வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

எதிர்பாராத கடைசி நிகழ்வு

எதிர்பாராத கடைசி நிகழ்வு

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து எதிர்பார்த்த வகையில் இல்லாமல் கடைசி கட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று விட்டது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல இந்த ஆறாவது சீசனில் தான் நடந்திருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து கூறிக் கொண்டிருக்கின்றனர். காரணம் ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு அடுத்தவர்களை தரக்குறைவாக பேசி தான் தான் கெத்து தனக்கு கீழே தான் அனைவரும் என்கிற ஒரு மனநிலையில் இருந்த அசீம் கடைசி டைட்டில் ஜெயித்துவிட்டார் என்று ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

டைட்டில் மாறிவிட்டது

டைட்டில் மாறிவிட்டது

ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய நிலை தவறாமல் பிறருக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த விக்கிரமனுக்கு டைட்டில் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் அதிகமானோர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசியில் அது கிடைக்காமல் போய்விட்டது. அந்த நிலையில் மேடையில் விக்ரமனுடைய தங்கை மற்றும் குடும்பத்தினரை கமல் பேச கூறியிருந்தார். அப்போது அவருடைய சகோதரி பேசிய வார்த்தைகள் ரசிகர்களின் மனநிலையாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.

சகோதரியின் பாராட்டு

சகோதரியின் பாராட்டு

முதல் முறையாக விக்ரமனின் சகோதரி அனைவரின் முன்னிலையிலும் தோன்றியிருக்கிறார். ஏற்கனவே விக்ரமன் தன்னுடைய சகோதரியைப் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். அதுபோலவே தற்போது மேடையில் அவர் பேசவும் செய்திருக்கிறார். 106 நாட்கள் இந்த வீட்டுக்குள் இத்தனை பிரச்சனை போராட்டங்களுக்குப் பிறகும் தன்னிலை மாறாமல் பொதுவெளியில் மக்கள் முன்னாடி நாம் எது பேசினாலும் நமக்கு ஒரு பொறுப்பு இருக்கு அந்த பொறுப்பை மனதில் வைத்துக் கொண்டு ஒரு அவேர்னஸோடு அதே நிலையில் தன்நிலை மாறாமல் சுயமரியாதை இழக்காமல் தன்னுடைய கொள்கையில் இருந்து ஒரு துளி கூட விலகாமல் ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்காரு என பேசிக் கொண்டிருக்கிறார்.

அண்ணனைப் போன்றே தங்கையும்

அண்ணனைப் போன்றே தங்கையும்

எப்பவுமே எங்க அண்ணன் ஒரு ஸ்டாண்டர்ட் பர்சன் தான். இப்போ பெரிய ஸ்டாண்டர்ட் வச்சிருக்காரு, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. அவருடைய தங்கை என்று சொல்வதற்கு எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விக்ரமன் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் டைட்டில் ஜெயிப்பது சரி என்று கமல் கேட்ட கேள்விக்கும் ஷிவின் ஜெயித்தால் எனக்கு ரொம்பவே சந்தோஷம் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருந்தார். அதையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ஷிவின் அல்லது விக்கிரமன் தான் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது போல விக்ரமனின் சகோதரியும் எதிர்பார்த்திருக்கிறார் என்று பலர் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+