மகிழ்ச்சியை பகிர்ந்த ஜி பி முத்து, தான் போகிற இடமே வேறாம்..பிக் பாஸ்க்கு இனி என்ட் கார்ட்டா?
சென்னை: ஜிபி முத்து தான் புதியதாக ஆப்பிள் ஐபோன் வாங்கி இருக்கும் மகிழ்ச்சியை தன்னுடைய ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஜிபி முத்து தான் இரண்டு வாரங்கள் போன் இல்லாமல் இருந்ததால் புது போன் வாங்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் வருவாரா? மாட்டாரா?என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது இவர் புது தகவலையும் கூறியிருக்கிறார்.

இரண்டு வாரத்தில் வெளியேற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலர் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் அதிகம் ரசிகர்களைக் கொண்ட ஜிபி முத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு இரண்டு வாரங்களில் வெளியேறிவிட்டார். இவர் இரண்டு வாரங்களில் வெளியாகினதும் இவருடைய ரசிகர்கள் அதிகமானோர் அதிகமாக ஃபீல் பண்ணி வருகின்றனர். இவர் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி கருத்து எதையும் கூறாமல் அமைதியாக இருக்கும் ஜி பி முத்து தற்போது வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இரு விதமான கருத்துக்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்துக்கு ஆரம்பம் முதலே அமோகமான ஆதரவு இருந்து வந்தது .அதனால் இவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் அவர் வீட்டின் நினைவாக இருக்கிறது, தன்னால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது என்று கூறி வெளி ஏறி விட்டார். வெளியே வந்த பிறகு தன்னுடைய குடும்பத்தோடும், குழந்தைகளுடன் இவர் பல வீடியோக்களை வெளியிட்டு வந்ததை பார்த்து கருத்து தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் இவருடைய பாசத்தை பார்த்து இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தாலும், பலர் இவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை இவர் மிஸ் செய்து விட்டார் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

புதுசா வாங்கிய ஐ போன்
உடல்நிலை சரியில்லாமல் இருந்த தன்னுடைய மகன் விஷ்ணுவை நினைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு சரியாக சாப்பிடாமல் தூங்காமல் ஜிபி முத்து தவித்து வந்தார் ஆனால் வெளியே வந்து தன்னுடைய குழந்தைகளை பார்த்ததும் இவர் மீண்டும் பழையபடி மாறிவிட்டார். தற்போது தன்னுடைய பழைய ரெகுலர் வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் இவர் ஒரு ஆப்பிள் ஐபோன் ஒன்றை புதியதாக வாங்கியிருக்கிறார். அந்த மகிழ்ச்சியை தன்னுடைய ரசிகர்களிடம் இவர் பகிர்ந்து தான் துபாய் செல்ல இருப்பதால் இந்த போன் வாங்கி இருப்பதாக கூறியிருக்கிறார்.

ரசிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்
ஜிபி முத்து இப்போதைக்கு வெளியேறி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வையில்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வருவார் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வீடியோ கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இவர் தான் துபாய் செல்ல இருப்பதால் இந்தப் புது போன் வாங்கி இருக்கிறேன் என்று கூறியிருப்பதால் அப்போ இனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஜிபி முத்து வரமாட்டாரா? அதனால்தான் புது போன் எல்லாம் வாங்குகிறாரா? அவரால் போன் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறி இருக்கிறாரே ,அதனால் தான் இப்படியா? என்று பலவிதமான கேள்விகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இது இப்போ எடுத்த வீடியோ தானா? அல்லது ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜிபி முத்து துபாய் சென்றிருந்தார். அப்போது எடுத்த வீடியோவை இப்போது வெளியிட்டு இருக்கிறாரா? என்று பலர் குழப்பத்தோடு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications