Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு அந்த போட்டியாளரின் பெயர் தான் வைக்கப் போகிறேன்... உளறிய ராபர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் தான் தயாரிக்கப் போகும் நிறுவனத்திற்கு தன்னோடு இருந்த போட்டியாளரின் பெயரை வைக்கப்போவதாக கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக ஒருவர் மீது ஒருவர் பாசம் வைப்பது நடந்து கொண்டிருந்தாலும் ராபர்ட் மாஸ்டர் செய்த செயல் இது உண்மையிலேயே இவருடைய கேரக்டர் இதுதான் என்பதை உணர்த்துகிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

அந்த செயல் ஏமாற்றம்தான்

அந்த செயல் ஏமாற்றம்தான்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு டான்ஸ் மாஸ்டராக ராபர்ட் அறிமுகம் ஆகி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சாந்தி மாஸ்டரும் இவரும் டான்ஸ் மாஸ்டர் கேட்டகரியில் இருந்தாலும் சாந்தி மாஸ்டர் ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு ராபர்ட் மாஸ்டர் தனி ஒரு ஆளாக உள்ளே அதிக அளவில் பர்பாமன்ஸ் செய்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான் கிடைத்திருந்தது. இவர் தன்னுடைய திறமையை காட்டி பலருக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுப்பார் என்று பார்த்திருந்த ரசிகர்களுக்கு நான் அப்படியெல்லாம் இல்லை என்று இவர் அதிக நாட்கள் தனியாகவே டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது பார்க்கும்போது ஏமாற்றமாக இருந்ததாக கூறி வருகின்றனர்.

பெயரளவுக்கு இல்லை

பெயரளவுக்கு இல்லை

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் பல டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவருடைய கேரக்டரை பற்றியும் ஒவ்வொரு பேட்டியிலும் பேசி வருகிறார். அதுபோல தான் புதியதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கப் போவதாகவும் அதற்கு தன்னுடைய மகளான குயின் சி யின் பெயரை வைக்கப்போவதாகவும் இவர் கூறியிருக்கிறார். பிகாஸ் வீட்டிற்குள் நான் போய் என்னுடைய மகள் என்று கூறினேன். ஆனால் அது பெயரளவுக்கு இல்லை என்னுடைய மனதில் இருந்து தோன்றியது. அதனை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

காதலியை குறித்த பெருமை

காதலியை குறித்த பெருமை

என்னதான் ரச்சிதாவின் மீது எனக்கு கிரஷ் இருக்கிறது என்று நான் அவர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தாலும், எனக்கு எப்போதுமே என்னுடைய மகள் பீலிங் எனக்கு குயின்சியின் மீது தோன்றுகிறது. அதனால் குயின்சிக்காக என்னுடைய நிறுவனத்தின் பெயரைக் கூட வைத்திருக்கிறேன். ஆனால் அதைக் குறித்து என்னுடைய காதலி எதுவும் சொல்லவில்லை. அவளும் ஓகே என்று சொல்லிவிட்டால் என்று கூறியிருக்கிறார். என்னுடைய காதலி என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். அதனால் நான் என் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யலாம் என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

உறுதியான முடிவு

உறுதியான முடிவு

ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது வனிதா இவர் குயின்சியுடன் பழகுவதை குறித்து அடிக்கடி பேசி இருப்பார். ஆனால் யார் என்ன சொல்லி என்னை பற்றி பேசினாலும் நான் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. என்னுடைய மனதில் இருப்பதை நான் செய்து கொண்டே இருப்பேன் .என்னை பலர் ஏமாற்றிவிட்டார்கள் என்னை பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பிறகு தூக்கி எறிந்து விட்டார்கள். அவர்களை குறித்து நான் இப்போது அழுது கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் இப்போது எடுத்து இருக்கும் முடிவு உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+