மீண்டும் பிக் பாஸ்க்குள் வரும் ஜி.பி முத்து.. எதிர்பாராமல் வெளியே கூட்டிக்கொண்டு செல்பவர் இந்த நபரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 93 வது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஜி.பி முத்து மீண்டும் வருகிறாராம்.

அனைவரும் எதிர்பார்த்த பணம் பெட்டியை தூக்கிக்கொண்டு ஜி.பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சிகள் வர இருக்கிறாராம்.

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல இருக்கும் போட்டியால் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

மனசை குழப்ப பாக்குறாங்க

மனசை குழப்ப பாக்குறாங்க

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் முடிவடைய இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிகள் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அப்துல் என இரண்டு youtube பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். சுரேஷ் சக்கரவர்த்தி ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளராக பலருக்கும் தெரிந்தாலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து வருகிறார். அந்த வகையில் இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அனுப்பப்பட்டு போட்டியாளர்களின் மனநிலையை குழப்பும் வகையில் அவர்களுடைய நெகட்டிவ் மட்டுமே போட்டியாளர்கள் மத்தியில் பேசிவிட்டு வந்திருக்கின்றனர்.

இன்று இரண்டு நபர்கள்

இன்று இரண்டு நபர்கள்

அதைத் தொடர்ந்து இன்று விஜே பார்வதி மற்றும் விஜே ஷோபனா அதாவது இவர்கள் இருவருமே இரண்டு youtube சேனல்களின் தொகுப்பாளர்கள் தான். இவர்கள் இருவரும் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களோடு கலந்துரையாடி அவர்களின் மனதை மாற்றும் செயல்களில் தான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிகிறது..ஏற்கனவே நேற்று சுரேஷ் சக்கரவர்த்தியின் பேச்சால் அசீமின் மனநிலையில் பெரிய அளவில் மாற்றம் தெரிகிறது. இதுவரைக்கும் ஸ்டைலாக ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்த அசீம் இன்று ஒரு லுங்கி பணியனோடு மாறிவிட்டார். இந்த நிலையில் இன்று உள்ளே போய் இருக்கும் ஷபானா மற்றும் விஜே பார்வதி இருவரும் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

மீண்டும் ஜி பி முத்து

மீண்டும் ஜி பி முத்து

அதே நேரத்தில் இன்னும் சில நிமிடங்களில் ஜி.பி முத்துவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கலந்து கொள்ள இருக்கிறாராம். அதுவும் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு அவர் உள்ளே செல்ல இருக்கிறாராம். பணபெட்டியில் இந்த முறை எவ்வளவு பணம் வைக்கப்படுகிறது என்றும் யார் தூக்குவார்கள் என்றும் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. ஏற்கனவே போட்டியாளர்கள் மனக்குழப்பத்தில் இருக்கும் நிலையில் இந்த முறை அதிகமான பணம் வர வேண்டும் என்று யாரும் காத்திருக்க போவதாக தெரியவில்லை. குறிப்பாக இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் இப்ப வரைக்கும் ஏடிகே இருந்து வருகிறார். அதனால் அவர் தூக்கிக்கொண்டு வெளியே வந்தால் அவருடைய புத்திசாலித்தனமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

பெட்டியோடு வெளியே வருபவர் யார்

பெட்டியோடு வெளியே வருபவர் யார்

அது மட்டுமல்லாமல் கடந்த வாரம் மைனா நந்தினி சொற்ப வாக்குகளின் வித்தியாசத்தில் தான காப்பாற்றப்பட்டதாகவும், கடைசி நேரத்தில் எதிர்பாராமல் தான் ரச்சிதா வெளியேற்றப்பட்டு வந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த முறை மைனா பெட்டியை தூக்கினாலும் அவருக்கு அதிகமான போனஸ் தான். இந்த வாரம் போட்டியாளர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை ஏற்கனவே குறைந்துவிட்ட நிலைமையில், யார் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொண்டு வெளியே சென்று விடலாம். குறிப்பாக அசீம் கூட எடுப்பதற்காக முயற்சி செய்யலாம் என்று கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான பதில் இன்று தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+