பிக் பாஸ் 8: கொளுத்தி போட்ட தர்ஷா.. அர்னவ் பற்றி புட்டு புட்டு வைத்த அருண்.. வெடித்த பெரும் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 16ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அர்னவ் தன்னிடம் பேசியதை பற்றி தர்ஷா குப்தா எல்லாரிடமும் சொல்ல, அதை வைத்து அருண் மற்றும் அர்னவ் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

18 போட்டியாளர்களோடு பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதில் முதல் போட்டியாளராக அறிமுகமான ரவீந்தர் முதல் போட்டியாளராக எலிமினேஷன் ஆகி வெளியே சென்று இருக்கிறார். இப்போது 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் முதல் வார தலைவராக தர்ஷிகா வெற்றி பெற்றிருந்தார். இரண்டாவது வாரம் சாச்சிகா தலைவராக வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் ஆண்கள் அணியில் சத்யாவிற்கு பதிலாக முத்துக்குமார் தான் எல்லா ரூல்ஸ்களையும் போட்டுக் கொண்டிருக்கிறார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு போக சொல்லி கடந்த வாரத்திலேயே விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். போட்டியாளர்கள் செய்த நிறை குறைகளை அவர்களுடைய முகத்துக்கு நேராகவே பேசி இருந்தார். இதனாலேயே இந்த வாரம் ஆளாளுக்கு கண்டென்ட் கொடுக்க வேண்டும் என்று புது புது பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் வாரத்தை போலவே இந்த வாரமும் ஆண் போட்டியாளர்களின் சார்பாக ஒருவர் பெண்கள் வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அதுபோல பெண் போட்டியாளர்களில் ஒருவர் ஆண் போட்டியாளர்கள் வீட்டிற்கு சென்று இருக்கிறார். முதல் வாரத்திலேயே நான் பெண்கள் சார்பாக ஆண்கள் வீட்டிற்கு போக போறேன் என்று பிரச்சனை செய்த தர்ஷா தான் இந்த வாரம் பெண்கள் சார்பாக ஆண்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

ஆண்களை அங்கு நிம்மதி இல்லாமல் செய்வேன் என்று சபதம் போட்டுவிட்டு அவர் போனது போலவே இப்போது ஆண்களுக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறார். உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் தோற்றுப் போன போது இதற்கு நீங்கள் என்னை அனுப்பி இருந்தால் நான் நிறைய பணம் சம்பாதித்திருப்பேன் அதுபோல அதற்கு தகுந்த பர்சேஸ் செய்திருப்பேன். ஆனால் நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்காததால் தான் தோற்றுப் போயிட்டீங்க.

இப்போ உங்களால் நானும் சாப்பாடு இல்லாமல் இருக்கனுமா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று தர்ஷாவிடம் அர்னவ் இந்த வீட்டில் உள்ள ஆண்கள் எல்லாரும் உன்னிடம் பேசக்கூடாது என்று ரூல்ஸ் போட்டு இருக்காங்க என்பதை போய் போட்டுக் கொடுக்க, அதை எல்லோர் முன்பும் தர்ஷா உடைத்திருக்கிறார். தர்ஷா சுற்றி இத்தனை கேமரா இருக்கிறது என்பதை சரியாக புரிந்து கொண்டு தன்னுடைய விளையாட்டை கச்சிதமாக நகர்த்தி வருகிறார்.

இரண்டு பக்கமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த அர்னவ் இன்று இரண்டு பக்கமும் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். தர்ஷாவிடம் எப்படி நமக்குள் பேசியதை நீ சொல்லலாம் என்று அருண் உட்பட எல்லா போட்டியாளர்களும் அர்னவை ரவுண்டு கட்டி பிரச்சனை செய்கின்றனர். இந்த வாரம் இதை வைத்தே ஒரு பஞ்சாயத்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+