Bigg Boss : பிக் பாஸ் ப்ரீஸ் டாஸ்க்கில் முதலில் வரும் குடும்பம் இவங்க தான்! அப்போ சம்பவம் இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி 70 நாள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் ப்ரீஸ் டாஸ்க் தொடங்க இருக்கிறது. அதில் யாருடைய குடும்பம் முதலில் வரப்போகிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேச்சு சோசியல் மீடியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் நேற்று இரவு பார்வதிக்கு என்னதான் ஆச்சு? எதனால் அவர் பேய் அறைந்த மாதிரி இருக்கிறாரே என்று தான் பலருக்கு சந்தேகமாக இருக்கு. பிக் பாஸ் வீட்டிற்குள் நாய் குரைப்பது நார்மலாக பகல் நேரத்தில் நடக்கும். ஆனால் இரவு திடீரென நாய் குரைத்தது.. கொஞ்ச நேரமாக கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் காணவில்லை.

பிறகு பார்வதி வந்தாலும் எங்க அம்மா என்ன சொல்லுவாங்க தெரியலையே என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார். அப்போது கம்ரூதின் வெளியே போய் சில மாசம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சத்தியம் வேற பண்ணி கொடுக்கிறார். இதெல்லாம் பார்க்கும்போது என்னையா நடக்குது இங்கன்னு எல்லோருக்கும் தோணலாம்.
ஆனால் இது எதிர்பாராததை எதிர்பாருங்கள் நிகழ்ச்சியாச்சே இப்படித்தான் இருக்கும் என்று நாமும் மனதை தேற்றிக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சியை பார்த்தாக வேண்டியது இருக்கு. இந்த நிகழ்ச்சி பற்றிய ட்ரோல் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் டிஆர்பியும் இப்போது மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதை பார்க்கும்போது சோசியல் மீடியாவில் இந்த நிகழ்ச்சி எல்லாம் ஒரு நிகழ்ச்சியா என்று சொல்லுறவங்க தான் உட்கார்ந்து பார்த்துட்டு இருக்காங்களா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்கள் கடந்து விட்டதால் பிரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் டான்ஸ் மாரத்தானில் யார் அதிக நேரம் டான்ஸ் ஆடி வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடைய பேமிலி பிக் பாஸ் வீட்டில் ஒரு இரவு தங்கலாம் என்று வேற சொல்லி இருக்கிறார்கள். இதற்காக அதுவரைக்கும் அழுது ஆர்ப்பாட்டம் போட்டு நடித்துக் கொண்டிருந்த சான்ட்ரா கூட இப்போது அதை எல்லாம் தூக்கி வைத்து விட்டு டான்ஸ் ஆட தொடங்கி விட்டார்.
இந்த நிலையில்தான் யாருடைய குடும்பம் முதலில் வரப்போகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது வேறு யாரும் இல்லை சான்ட்ரா குடும்பமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் சான்ட்ராவிற்கு இப்போது அதிக நெகட்டிவ் இருக்கிறது. இவருடைய கேரக்டரால் உள்ளிருக்கும் மற்ற போட்டியாளர்களின் விளையாட்டும் தடைபடுகிறது.
இதனால் இவரை முதலில் வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன்பு சான்ட்ராவின் ஃபேமிலி வந்து விட்டு போய்விடும் என்றும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து பார்வதி அல்லது கம்ருதீன் இருவருடைய வீட்டில் இருந்து தான் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம். இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் யாருடைய ஃபேமிலியை நீங்க எதிர்பார்க்கிறீங்க...?
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications