Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss: பிக் பாஸில் இப்படி பண்ணிட்டாங்களே?எதிர்பாராத டபுள் எவிக்ஷன்? அதுவும் வெளியே போறது இவங்களாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரு வெளியே போறாங்க என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி இரண்டு போட்டியாளர்களை வெளியே அனுப்பி விடுறாங்களாம். நாளைக்கான எபிசோடின் சூட்டிங் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்ப்போமா?

பெரிய எதிர்பார்ப்போடு இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ரசிகர்களே அதிர்ச்சி ஆகுற மாதிரிதான் இந்த சீசன் போட்டியாளர்கள் எல்லாருமே வந்து குவிந்தாங்க. அதிலும் சோசியல் மீடியா பிரபலங்களை பார்த்து பார்த்து உள்ளே அனுப்பி வைத்த டிஆர்பி கூடும் என்று எதிர்பார்த்த விஜய் டிவியோட கணிப்பு இந்த சீசனில் மொத்தமா மாறிப்போச்சு. இதற்கு முந்தைய சீசன்களிலாவது ஒரு சில சினிமா பிரபலங்களை களம் இறக்குவாங்க அவங்களோட ஆட்டத்தை பாக்குறதுக்காக ரசிகர்களுக்கும் ஆர்வம் இருக்கும்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay Sethupathi Kemi

ஆனால் இந்த சீசனில் தான் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டு பிரபலமானவர்களை கூட்டிட்டு வந்து பிக்பாஸ் வீட்டுக்குள்ள விட்டு இருக்காங்க. அதனால வீட்டுக்குள்ள வந்த பிறகும் எங்களை நாங்க மாத்திக்க மாட்டேம்னு சில போட்டியாளர்கள் ரிலீஸ் தான் போட்டுட்டு இருந்தாங்க. தர்பூசணி திவாகரை சொல்லவே வேண்டாம். அவர் வெளியே எப்படி இருந்தாரோ அதேபோல உள்ளேயும் தற்பெருமை பேசிட்டு இருந்தாரு.

அதனால் அவருக்கு அதிகமாக நெகட்டிவ் வந்ததால் இரண்டு வாரத்திற்கு முன்பு அவரை வெளியே தூக்கி போட்டுட்டாங்க. இப்போ உள்ளே அவருடைய இடத்தை பார்வதி நிரப்பிட்டு இருந்தாங்க. ஆனா இந்த வாரத்தில் பார்வதியின் விளையாட்டு கொஞ்சம் மாற்றம் அடைந்து இருக்கு. இதனால யார் இந்த வீட்டை விட்டு வெளியே போக போறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.

நேற்று வரைக்கும் வெளியான வாக்குகளின் அடிப்படையில் வியானா மற்றும் ரம்யா ஜோ தான் குறைவாக வாக்குகள் பெற்றிருந்தார். உள்ளே ரம்யா ஜோ பெருசாக வெளியே தெரியவே இல்ல, அவரை விட வியானாவுக்கு ஓட்டு குறைவாக இருந்தது என்று தான் கூறப்பட்டது. ஆனால் 50 நாளை கடந்துவிட்ட வியானா விளையாட்டை கொஞ்சம் மாற்றி கொண்டு வந்திருக்காங்க.

எப்ஜே கூட வியானா நெருங்கி விளையாட தொடங்க, இருவருக்கும் காதல் கண்டண்டு தொடங்கி இருக்கிறது. இதனால் இவரை இப்பவே வெளியே கொண்டு போக மாட்டாங்க என்று நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. இப்போ அதுதான் நடந்திருக்கிறது என்று சொல்லுறாங்க. அதாவது நாளைக்கான சூட்டிங் இன்று நடைபெற்று வரும் நிலையில் வெளியான தகவலின் படி இந்த வாரம் 2 எவிக்ஷன் செய்ய போறாங்கன்னு சொல்லுறாங்க.

அதிலும் ஒரு எவிக்ஷன் யாரும் எதிர்பார்க்காதது. அது வேறு யாரும் இல்லை கனி தான். கனி ஒரு அன்பு கூட்டத் தலைவியாக இருந்தாலும் அவரும் ஓரளவு விளையாட்டை விளையாடி கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவரை இந்த வாரம் தூக்கினால் தான் அன்ஃபேர் எவிக்ஷன் என்று அடுத்த வாரத்தில் இந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு பேச்சு இருக்கும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதோடு கனியுடன் இன்னொரு போட்டியாளரும் அனுப்ப போறாங்களாம். அவங்க வேற யாரும் இல்ல அரோரா என்று சொல்றாங்க. அரோரா உள்ளே பல இடத்துல பேசி இருக்காங்க. சில இடங்களில் அமைதியா இருந்தாலும் சில இடங்களில் ஜாலியாகவும் சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிற கேரக்டர் தான். ஆனால் அவரை இந்த வாரம் தூக்க போறதா சொல்லி இருக்காங்க. இப்போ வரைக்கும் ஷூட்டிங் முடியல என்பதால் இந்த தகவல் உறுதியாகுமா? அல்லது கடைசி நேரத்தில் பிக் பாஸ் டீம் ஏதாவது மாற்றம் செய்ய போறாங்களான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+