பிக் பாஸில் இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர் இவரா? கடைசி நேரத்தில் மாற்றம்! பார்வதிக்கு எகிறும் சப்போர்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியே போகிறார்! என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. அதுவும் யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டியாளரை தான் நாளை வெளியேற்ற போறாங்களாம். அதுபோல ஆரம்பத்தில் இருந்து அதிகமான நெகட்டிவ் பெற்று வந்த பார்வதிக்கு இந்த ஒரே வாரத்தில் அதிக சப்போர்ட் கிடைச்சு இருக்கிறது அதை பற்றி விரிவாக பார்ப்போமா.
இதுவரைக்கும் இல்லாத மாதிரி தான் தற்போதைய பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ரசிகர்களை கடுப்பாக்கி கொண்டிருக்கிறது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு சொல்ற மாதிரி ஒவ்வொரு நாளும் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் போட்டியாளர்கள் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் முதல் ஒரு வரத்திற்குள்ளே இந்த போட்டியாளர் தான் இந்த சீசன் டைட்டில் வின்னராக வரவேண்டும் என்று ரசிகர்கள் டார்கெட் செய்து விடுவார்கள். ஆனால் இந்த சீசனில் மட்டும் அப்படி யாரையும் யூகிக்கவே முடியல.

இவங்க நல்லவங்களா? கெட்டவங்களானு கண்டுபிடிக்க முடியாத மாதிரி தான் ஒவ்வொருத்தருடைய ஆட்டமும் மாறிக்கிட்டே இருக்கு. ஆரம்பத்தில் திவாகர் பார்வதி கூட்டணி தான் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. பார்வதி எல்லா ப்ரோமோவிலும் நானே வருவேன்னு ஒத்த காலையில் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. அதனால அவங்களுக்கு மட்டும்தான் அதிகமா போக்கஸ் இருந்தது. ஆனால் கடந்த வாரத்துல அப்படியே டோட்டலா மாறிட்டாங்க.
யாரோ ரகசிய தகவல் சொல்லிட்டாங்களா? பார்வதி இப்படி மாறிட்டாங்களே? என்று தான் ரசிகருக்குள்ள ஒரு சிந்தனை வருது. அதேபோல ஒருவேளை பார்வதியுடைய நிஜ கேரக்டரே இதுதானா? ஆரம்பத்தில் யாரோ இவங்க கிட்ட சண்டை போட்டுட்டே இருந்தா தான் நீங்க டைட்டில் வின்னராக முடியும் என்று சொன்னதால அப்படி இருந்தாரா? என்ற கேள்விகளும் சிலருக்கு இருக்கிறது.
எது எப்படியோ இந்த வாரம் நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் பார்வதி வசந்தி டீச்சராகவே மாறிட்டாரு. எவ்வளவோ அடிவாங்கினாலும் எல்லாத்தையும் தாங்கிக்கிடடு நான் இரும்பு மனுஷின்னு நடிச்சுக்கிட்டு இருந்தாலும் சில நேரங்களில் அழுதுட்டாரு. ஒரு வழியா இந்த வாரம் சனிக்கிழமையும் வந்தாச்சு.. போன வாரம் முழுக்க பிரஜன், சான்ட்ராவை விஜய் சேதுபதி அடிச்சிருந்தார்.
ஆனால் சான்ட்ராவை விட திவ்யாவுக்கு தான் அடி பலமா இருந்துச்சு. இந்த வாரம் பெரிய பஞ்சாயத்து நடக்கலனாலும் பார்வதியோட விளையாட்டை விஜய் சேதுபதி பாராட்டப் போறாரா? அல்லது அவர் அழுததை வைத்து ஓட்ட போறாரா? என்ற எதிர்பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. எல்லாவற்றுக்கும் இன்னும் கொஞ்ச நேரத்தில் விடை கிடைத்துவிடும்.
அதேபோல இந்த வாரம் வியானா தான் வெளியே போறாங்க என்கிற மாதிரி இப்ப வரைக்கும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இன்றைக்கான சூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என்பதால் கடைசி நேரத்தில் அரோராவை வெளியேற்ற போவதாகவும் சொல்லப்படுகிறது. அரோரா, வியானா இவங்க ரெண்டு பேரில்தான் யாரோ ஒருவரை வெளியேற்ற போறாங்களாம். வியானா இந்த வாரம் க்யூட்டா செய்கிறேன் என்கிற பெயரில் ரொம்பவே ஆராத்து வேலை செய்திருந்தார்கள் என்பது பலருக்கு உடைய கருத்தாக இருந்துச்சு. அதை வச்சு இன்று விஜய் சேதுபதி வியனாவை கேள்வி கேட்க போவதாகவும் சொல்லுறாங்க. ஆனால் என்ன நடக்கப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications