பிக்பாஸ் அல்டிமேட்: முதல் போட்டியாளரின் அறிமுகமே வேற லெவல்..இவர்தான் அவரா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் பற்றி ப்ரமோவில் வெளியிட்டிருக்கின்றனர்.
முதல் ப்ரமோவில் புகழ் வந்து குழப்பமாக சில க்ளூக்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

விரைவில் வலம் வரும் பிக்பாஸ் அல்டிமேட்
இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கும் நிலையில் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விபரங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் கலந்துகொண்டு கலக்கிய போட்டியாளர்கள் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

24 மணிநேரமும் நேரடியாக
ஏற்கனவே ஒவ்வொரு சீசனிலும் பிரச்சனைகளையும், கலவரங்களையும் செய்தவர்களை மொத்தமாக இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் பார்ப்பதால் வேற லெவல் இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும் சண்டை சச்சரவுகளும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இனி ரசிகர்கள் அனைவரும் ஹாட்ஸ்டார் பக்கம் தான் இருப்பார்கள், என்றெல்லாம் கருத்துக்கள் பரவி வருகிறது. பொதுவாக 24 மணி நேரமும் எடுக்கப்படும் நிகழ்ச்சிகளை ஒரு மணி நேரம் ஒளிபரப்பினாலே அதில் பல்வேறு பஞ்சாயத்துக்கள் இருக்கும். ஆனால் இனி இதில் சொல்லவே வேண்டாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல் ப்ரமோ
தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே கமல் கலந்துகொண்ட ப்ரமோக்கள் மட்டுமே வெளியான நிலையில் தற்போது போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அதில் புகழ் மாஸாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் பொரியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இன்னொருவர் பாஸ் ஒரு குட் நியூஸ் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்த கண்டஸ்டண்ட் யாரு என்று ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். என்ன க்ளூ வாட்சன் என்று புகழ் கேட்க, இதோ என்று வாட்சன் மேலிருந்த யானையின் புகைப்படத்தை காட்டி இருக்கிறார்.

ஸ்பெஷல் க்ளூ
யானை பசியில் மெலிந்து இருக்கிறது, யானை....பசி..என்று இழுத்துக் கொண்டிருக்கும் வாட்சன், பொறி என்று க்ளூ கொடுக்கிறார். யானைப் பசி சோளப்பொறி கவிதை மாதிரி இருக்கலா?? என்று புத்தகத்தை தேடி கொண்டிருக்கிறார். யானையே இப்படி பட்டினி போட்டு இருக்கிறார் என்றால் கண்டிப்பா இவர் ஒரு காட்டுப் பயலாகத்தான் இருக்க வேண்டும் என்று புகழ் கூறுகிறார்.வாட்சன் கவிதைகளை படித்துக் கொண்டிருக்கிறார். யானையைப் பட்டினி போட்டுவிட்டு என்னவெல்லாம் கவிதை எழுதி இருக்கிறார் என்று கூறுகிறார். அப்போது புகழ் கையில் ஒரு பக்கம் பாம்பு பொம்மையும் மற்றொரு பக்கம் கன் வைத்திருக்கிறார். இதை பார்க்கும்போது ரசிகர்கள் சினேக்....கன் என்று கண்டுபிடித்து ஓ சினேகனுக்கா இவ்வளவு அலப்பறை என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications