ஜஸ்ட் மிஸ்..அஜித் மட்டும் இல்லனா சைத்ரா கூறிய தகவல்கள்.. ரசிகர்களின் ஆதரவு
சென்னை: சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி வலிமை திரைப்படத்தில் தனக்கு நேர்ந்ததைப் பற்றி கூறியிருக்கிறார்.
அஜித்குமார் தனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளார் என்பதை சைத்ரா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

திகைக்க வைத்த பதில்
சின்னத்திரையில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டி தற்போது வெள்ளித்திரையையும் விட்டுவைக்காமல் கால்தடம் எடுத்து வைத்திருக்கிறார். வெள்ளித்திரையில் அவரைப் பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சைத்ரா கொடுத்த பதில் சமூக வலைத்தளத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது. முதல் திரைப்படத்தில் இவ்வளவு அனுபவமா?? என்று ரசிகர்கள் கேட்டு கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் ஓபனாக பேசிய விதமும் பலரையும் கவர்ந்து இருக்கிறதாம். ரசிகர்கள் அனைவருக்கும் மரியாதை கொடுத்து அவர்களின் கேள்விக்கு பொறுமையாக பதில் அளித்ததற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

அழகான வில்லி
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியலில் பிரியா கேரக்டரில் சின்னத்திரை ரசிகர்களை கவர தொடங்கிய சைத்ரா கதாநாயகியாக நடித்தால் தன்னுடைய திறமை புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று அடுத்த சீரியலில் வில்லி அவதாரத்தை எடுத்துள்ளார். வில்லத்தனம் செய்யும் வில்லியாக இருந்தாலும் சைத்ரா மாதிரி இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லும் விதத்தில்தான் யாரடி நீ மோகினி சீரியலில் தன்னுடைய அழகாலும் மிரட்டும் வில்லத்தனத்தால் ரசிகர்களை வித்தியாசமாகக் கவர்ந்திருந்தார். வில்லிகள் என்றாலே பலரும் கழுவி ஊற்றினாலும் இவருடைய வில்லத்தனத்தை மட்டும் ரசிகர்கள் ரசித்து வந்தனர்.

ட்ரெய்லரில் அதிர்ச்சி கொடுத்த சைத்ரா
தற்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை மீண்டும் கதாநாயகியாக சன்டிவியில் காலடி எடுத்து வைத்து கயல் சீரியல் மூலமாக அனைவரின் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக இடத்தை பிடித்துவிட்டார். கயல் கேரக்டரை ரசிகர்கள் பலர் தங்கள் வீட்டுப் பெண் என்று கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தான் இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சைத்ரா தான் நடித்த திரைப்படத்தை பற்றி கடைசி வரைக்கும் வாய் திறக்காமல் அமைதியாக காத்துக்கொண்டிருந்தார். திரைப்படத்தின் டிரைலர் வெளியான பிறகுதான் ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகி கேள்வி கேட்கத் தொடங்கியதும் ஆமாம் என்று கூறியிருந்தார்.

சைத்ராவின் சூப்பர் பதில்
அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு தற்போது பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சைத்ராவும் அதிக அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அஜீத் குமாருடன் சைத்ரா நடித்ததை பற்றி ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பட அனுபவங்களைப் பற்றி கேள்விகளை எழுதி வருகின்றார்கள். அதில் ஒரு ரசிகர் ஜஸ்ட் மிஸ் இல்லன்னா செத்து இருப்பிங்க தல காப்பாற்றிவிட்டார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு சைத்ரா, ஹா ஹா ஹா என்று சிரித்தபடி கரெக்ட் ஜஸ்ட் மிஸ்..என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் ௺ கலாய்ப்பது தெரிந்தும் அவருக்கு கம்பெனி கொடுக்கிறார் என்று சைத்ராவை பார்த்து பாராட்டி கமெண்ட் அனுப்பி வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications