அம்மா தினமும் போன் பண்ணுவாங்க.. முதல்வர் விஜய்யின் டேமேஜை கண்ட்ரோல் செய்த மகன் ஜேசன்
சென்னை: முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கொடுத்த முதல் பேட்டியில் அப்பா குறித்து பேசிய விஷயங்கள் ரசிகர் மத்தியில் கவனம் பெற்ற நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் 2வது பேட்டியில் தனது பெற்றோர் மற்றும் தங்கை குறித்து அவர் பேசியிருக்கும் விஷயங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் குடும்பத்தை பற்றி வெளியில் பலவிதமான பேச்சு இருந்தாலும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் கொடுக்கும் பேட்டிகளில் குடும்பத்தை குறித்து பேசும்போது அவர்களுடைய தனது நெருக்கத்தை வெளிப்படையாக சொல்லி வருகிறார். அந்த வகையில் சஞ்சய் கொடுத்த முதல் பேட்டி ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து 2வது பேட்டியில் அவர் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் தன்னுடைய சினிமா பயணம் பற்றியும் பேசி இருக்கிறார்.
விஜய் மகன் பேட்டி
முதல் பேட்டியில் பேசிய விஷயங்கள் தான் 2வது பேட்டியில் இருக்கிறது. ஆனாலும் இதில் சில விஷயங்கள் மட்டும் வைரலாகி வருகிறது. அதாவது சஞ்சய்யிடம் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதரவாக இருந்தது யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தூண் என்னுடைய அம்மா தான் என்று கூறியிருக்கிறார். அதோடு நிறுத்தாமல், தனது அம்மா 24 மணி நேரமும் தன்னைப் பற்றியும் தனது தங்கையை பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார், ஒருநாள் நான் அவரிடம் பேச மறந்து விட்டால் கூட உடனே அவரே போன் செய்து இன்று என்ன நடந்தது என்று விசாரிப்பார்.

அம்மாவிடம் எதையும் மறைக்கவே முடியாது. நான் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் என்னை பற்றி யோசித்து கொண்டு இருப்பார். நான் போன் பண்ணவில்லை என்றால் அம்மா ரொம்ப அப்செட் ஆகிடுவாங்க. நான் எங்கே போகிறேன், எங்கே வருகிறேன் என்று எல்லா விஷயமும் அம்மாவுக்கு தெரியும். அதுபோல அம்மாவிடம் எந்த பொய்யும் சொல்லவே முடியாது ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க. அதேபோல நான் எல்லா விஷயத்தையும் அம்மா அப்பாவிடம் ஓபனாக பேச மாட்டேன்.
தங்கச்சி தான் எல்லாம்
அவர்களிடம் என்ன பேச வேண்டுமோ அதை எல்லாம் சரியாக சொல்லி விடுவேன். ஆனால் என்னுடைய தங்கச்சியிடம் தான் நான் எல்லா விஷயத்தையும் ரொம்ப ஓப்பனா பேசுவேன். அவளிடம் எந்த விஷயத்தையும் மறைக்கவே மாட்டேன் என்று ஜேசன் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே முதல் பேட்டியில் நான் சினிமாவுக்கு வரப்போகிறேன் என்றதும் அப்பா தான் ரொம்ப சப்போர்ட் பண்ணாரு. உனக்கு என்ன உதவினாலும் நீ கேளு. நீ கேட்டா தான் எனக்கு தெரியும் ஆனா நானாக எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லி இருந்தார் என பேசி இருந்தார்.
அதற்குப் பிறகு விஜய் ரசிகர்கள் ஜேசன் பேட்டியை வைரல் ஆக்கி வந்தனர். அதுபோல விஜய் மனைவி கொடுத்த விவாகரத்து வழக்கையும் வாபஸ் வாங்கி விட்டார். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டனர் என்று கூறி வந்தனர். அதற்குப் பிறகு நடந்த சுதந்திர தின விழாவில் மொத்த குடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு ரொம்பவே இருந்தது. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிற மாதிரி விஜய் மனைவி மற்றும் மகள் மகன் யாருமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
ரசிகர்களுக்கு வருத்தம்
மாறாக விஜய்யின் தோழியான திரிஷா தான் விஜய் அம்மா, அப்பா பக்கத்தில் அமர்ந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதனால் மீண்டும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விட்டதா? அப்போ விஜய் பற்றி மகன் இனி என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்பில் சிகர்கள் இருந்தனர். ஆனாலும் விஜய்யின் இமேஜ் டேமேஜை மீண்டும் அவருடைய மகன் கண்ட்ரோல் செய்து இருக்கிறார்.
ரஜினியின் ஜானி படம் தான் ரொம்ப பிடிக்கும்.. ஏனென்றால்? விஜய் மகன் சொன்ன விஷயம்! பாராட்டும் ரசிகர்கள்
2வது பேட்டியில் அப்பாவை பற்றி எந்த குறைகளுமே அவர் சொல்லவில்லை. ஏற்கனவே முதல் பேட்டியில் அப்பாவின் வரலாற்று வெற்றி எங்களுக்கு பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறது எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது என்று மெச்சூராக பேசி இருந்தார். அதே பேச்சு இப்போதும் தொடர்கிறது.
ஜேசன் இயக்கி இருக்கும் சினிமா படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கான பிரமோஷனில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் குடும்ப விஷயத்தை பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இனி என்ன சொல்ல போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
