நடிகை நிதி அகர்வாலிடம் கூட்டத்தில் அத்துமீறிய நபர்கள்! கழுதை புலியோட மோசமான மிருகம்.. சின்மயி ஆதங்கம்
சென்னை: நேற்று டிசம்பர் 17ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த "தி ராஜாசாப்" திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை நிதி அகர்வாலிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் தவறாக நடந்து இருக்கிறார்கள். ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்த ஆபாச செய்கைகளை பாடகி சின்மயி கடுமையாக கண்டித்திருக்கிறார்.
நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராஜாசாப் படத்திலிருந்து "சஹானா சஹானா" பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் தனியார் மாலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை நிதி அகர்வாலும் கலந்து கொண்டிருந்தார். விழா நடந்து கொண்டிருந்த போதே அங்கு கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது.

ஆனாலும் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அங்கிருந்து வெளியே வந்த நிதி அகர்வால் தன்னுடைய காரை நோக்கி சென்று இருக்கிறார். அப்போது மொத்த ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்து நிதி அகர்வாலை நகரக்கூட முடியாத அளவிற்கு சுற்றி வளைத்துவிட்டனர். அதோடு சிலர் நிதி அகர்வால் அத்துமீறி தொட்டு இழுத்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்.
சிலர் நிதி அகர்வால் உடையை பிடித்து இழுத்து இருக்கின்றனர் இதனால் நிதி அகர்வால் சங்கடத்திற்கு உள்ளானார். இந்த இடத்தை விட்டு எப்படியாவது தப்பித்தால் போதும் என்று பயத்தோடும் பதட்டத்தோடும் இருந்தார். பிறகு அங்கு வந்த சில பாதுகாவலர்கள் நிதி அகர்வாலை ரசிகர்களிடமிருந்து மீட்டு காரில் ஏற்றி வைத்தனர். காருக்குள் வந்த பிறகும் கூட நிதி அகர்வால் சில நிமிடங்கள் தனக்கு நடந்த பதட்டமான சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. நடிகை என்றால் இவ்வளவு மோசமாக செயல்களில் ஈடுபடலாமா? என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் தான் நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்தில் அதிகமான ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் இறந்தனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத சூழ்நிலையில் ஒரு நடிகை வருகிறார் என்றதும் இப்படி கூட்டம் கூடி, அதுவும் அந்த நடிகையிடமே அத்துமீறி இருக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதோடு சிலர் ரசிகர்கள் என்கிற போர்வையில் சிலர் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும் போதே பயம் ஏற்படுவதாகவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி சின்மயி தன்னுடைய எக்ஸ் தளத்தில் இதை கடுமையாக கண்டித்து ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் கழுதைப் புலிகளை விட மோசமாக நடந்து கொள்ளும் ஒரு கும்பல் ஆண்கள். உண்மையில் கழுதைபுலிகளை சொல்லி ஏன் அவமானப்படுத்த வேண்டும்? ஒரே மனப்பான்மை கொண்ட ஆண்களை ஒரே கும்பலாக சேர்த்தால் அவர்கள் ஒரு பெண்ணை இப்படித்தான் துன்புறுத்துவார்கள்.
ஏதாவது ஒரு கடவுள் இவர்களை எல்லாம் அழைத்து சென்று வேறு ஒரு கிரகத்தில் ஏன் விடக்கூடாது என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications