அபிஷேக் வெளியே போயிட்டா பிக்பாஸில் உள்ளவர்கள் எல்லாம் அழுவார்கள்...கலாய்க்கும் சிபி
சென்னை: காமெடி வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கும் அபிஷேக்கை பார்த்து சக போட்டியாளர்களும் கலாய்க்க தொடங்கி விட்டனர்.
எத்தனை நாளைக்கு தான் அபிஷேக் ஆட்டத்தை பார்த்துக்கொண்டு இருக்குறது என்று மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம் பிக் பாஸ் போட்டியாளர்கள்.
இவ்வளவு நாளா ரசிகர்களும் இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று நெட்டிசன்கள் அபிஷேக்கை தங்கள் பங்குக்கு கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.

பயங்கரமான கேரக்டர்
எப்படியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய பங்களிப்பு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக விடவேண்டும் என்று கவனமாக
எல்லாப்பக்கமும் ரவுண்டு கட்டி கலக்கி வருகிறார் அபிஷேக். இவரை பார்த்ததும் சக போட்டியாளர்கள் தற்போது ஓடத் தொடங்கி விட்டனர். என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லையே என பலர் புலம்பியும் வருகிறார்களாம். இவ்வளவு நாட்களாக நெட்டிசன்கள் தான் இவரை கலாய்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இவருடன் இருக்கும் சக போட்டியாளர்களும் கலாய்க்க தொடங்கி விட்டாரகள்.

நெகட்டிவ் கமெண்ட்களால் பிரபலம்
யூடிப்யூப்பால் பிரபலமான அபிஷேக் தன்னைத்தனே ஒரு சினிமா பையன் என்று அழைத்துக் கொண்டு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பிரபலங்கள் பலரையும் பேட்டி எடுத்து ரொம்பவே பிரபலமாகிவிட்டார். திரைப்படங்களை ரிவ்யூ செய்வதில் தொடங்கி பிரபலமான நடிகர் நடிகைகளையும் பேட்டி எடுத்து, இவருக்கு எதுக்குப்பா பேட்டி கொடுத்தோம் என்று நினைக்க வைத்து விடுவாராம். அலர் பாசிட்டிவ் கமெண்டுகளால் பிரபலமாகி இருப்பார்கள் ஆனால் இவர் தான் நெகட்டிவ் கமெண்ட் களால் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக மாறி இருக்கிறார். அதே பாணியை தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் செய்து வருகிறார்.

இது வித்தியாசமான திறமை
அனைவரும் ஒரு வேளையை இப்படி செய்தால் நான் அதற்கு மாற்றாக அப்படித்தான் செய்வேன் என்று விடாபிடியாக இவர் செய்யும் செயல்கள் பலருக்கும குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் இவர் சக போட்டியாளர்களிடம் அன்பு மழையை பொழிந்து அனைவரையும் அக்கா, தங்கச்சி என்று முறை கூறி உறவுகளை வளர்த்துக் கொண்ட அபிஷேக், அதற்கு பிறகு வரும் நாட்களில் தன்னுடைய சுய கேரக்டரை காட்டத் தொடங்கிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் என்னதான் அடுத்தவர்கள் மீது கோபம் இருந்தாலும் இவர் அப்படியே முகத்துக்கு நேராக பேசிவிட்டு, இது பேசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. நீ என் தங்கச்சி என்று அப்படியே அடுத்தவர்களின் மனதை குளிர வைத்து விடுகிறார்.

அரசியலில் இதெல்லாம் சாதாரணம்
ஒவ்வொரு நாளும் ப்ரமோவில் இவருடைய அடாவடித்தனமும், முகமும் தெளிவாக பதியும்படி இவர் ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டிருக்கிறார். இதை இவ்வளவு நாட்களாக ரசிகர்கள்தான் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் நேற்றைய எபிசோட்டில் அவரே கூறிவிட்டாராம். ப்ரமோவில் வருவதற்காகத்தான் நான் இப்படி எல்லாம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்ததே இல்லை என்று கூறிய இவர் எப்படி எல்லாம் செய்தால் ப்ரமோவில் வருவார் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் என்று பலர் நக்கலாக கலாய்த்து வருகின்றனர். தற்போது இன்றைய ப்ரமோ களில் இவர் செய்த சேட்டைகளை பார்த்து சிபி, 'மச்சான் நீ வெளியே போயிட்டா பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் அழுவார்கள்' என்று கலாய்த்திருக்கிறார். இதுதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications