சிஎம் முன்னுதாரணமாக இருக்கணும்! ஆனா அவர் வீட்டிலேயே அவ்வளவு பிரச்சனை இருக்கு! மீண்டும் மார்க்கண்டேயன் மகன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையை சுற்றி கடந்த சில மாதங்களாக பரவிய சர்ச்சைகள், சமீபத்திய நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு புதிய திருப்பத்தை எடுத்திருக்கின்றன. விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றிருப்பது, அதற்கு முன்பாக மகன் ஜோசப் சஞ்சய் தனது தந்தையை பெருமையாக பேசியது என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் குடும்பத்தை பற்றிய பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் மார்க்கண்டேயன் மகன் கொடுத்த பேட்டி புதிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

மார்க்கண்டேயன் மகன் பேச்சு

சில வாரங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் அவதூறாக பேசியதாக மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் காவல் நிலையம் அருகே பேசிய அவருடைய மகன், முதலமைச்சர் சார் நீங்க உங்க மகன் கூட இல்ல... ஆனால் நான் என்னுடைய அப்பாக்காக இங்கே நிற்கிறேன்! என்று பேசிய வீடியோ லட்சக்கணக்கான வியூஸ் பெற்றது.

Vijay Markandeyan Sangeetha

பரிதாபங்கள் சேனல் வீடியோ

மார்க்கண்டேயன் மகன் பேசியதை வைத்து பிரபல பரிதாபங்கள் யூட்யூப் சேனல் ஒரு வீடியோவை ரீகிரியேட் செய்து இருந்தனர். ஆனால் அந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அதனாலயே அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த மார்க்கண்டேயனின் மகன் மீண்டும் அதே விவாகரத்தை பற்றி பேசி இருக்கிறார்.

மார்க்கண்டேயன் மகன் மீண்டும் பேட்டி

அதில் அவர் கூறுகையில், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்றால் அவர் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர் ( விஜய்) மகன் அவருடன் இல்லை, மனைவி விவாகரத்து கேட்டிருக்கிறார். அப்பா (எஸ் வி சந்திரசேகர்) உடைந்து போய் இருந்த சமயத்தில் கூட மகனாக விஜய் அங்கே போய் நிற்கவில்லை. இப்படி அவருடைய குடும்ப பிரச்சனையை கவனிக்கவில்லை என்றால், நாளை நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் எப்படி கவனிப்பார் என்று ஆதங்கத்தில்தான் நான் அப்படி பேசினேன். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்று அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து

இதுவும் இப்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சிலர் இது அவருடைய ஆதங்கம் என்று ஆதரிக்க, மற்றொரு தரப்பின், சில நாட்களுக்கு முன்பே விஜய் மகன் பேட்டியில் தன்னுடைய அப்பாவை பற்றி பெருமையாக பேசிவிட்டார். அதுபோல நேற்று விஜய்யின் மனைவியும் விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கி விட்டார். இப்படி இருந்தும் மீண்டும் அதே பிரச்சனையே பேச வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு பேசியதற்கு தான் இப்போது மார்க்கண்டேயனின் மகன் விளக்கம் கொடுத்திருக்கிறார் என்றும் அவருக்கும் சிலர் சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+