Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேற்று மறைந்த சபேஷ் யார் தெரியுமா? கீபோர்டு பிளேயர் முதல் சூப்பர் ஹிட் கானா பாடகர்.. வெளியே தெரியாத ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவோட 'தேனிசைத் தென்றல்' தேவாவுக்கு பக்கபலமாக இருந்த, அந்தப் பெரிய மனுஷன், இசையமைப்பாளர் சபேஷ் நேற்று காலமானார். அவர் சில நாட்களுக்கு முன்புதான் வரும் அக்டோபர் 27ஆம் தேதி ஒரு event நடைபெறப் போகிறது என்று சந்தோஷமாக வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் அக்டோபர் 24ஆம் தேதி அவர் காலமான செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

என்னதான் தேவா பேர்ல இசை வந்தாலும், அந்தப் படங்களோட பின்னால சபேஷ் - முரளியோட உழைப்பு எந்த அளவு இருக்குன்னு பலருக்கு வெளியே தெரியாத ரகசியமாகத்தான் இருந்திருக்கிறது.

Deva Sabesh

தேவாவுக்கு பின்னாடி ஒரு மலை

சபேஷ் - முரளி ரெண்டு பேரும், தேவாவோட இரட்டைச் சகோதரர்கள். சபேஷ் 1983லேயே கீபோர்டு பிளேயரா சினிமாவுக்கு வந்துட்டாரு. அண்ணன் தேவா 89லதான் அறிமுகமானார். ஆனா, தேவாவுக்கு வாய்ப்புகள் கிடைக்காம கஷ்டப்பட்ட காலம் தொட்டு, அவருக்கு உறுதுணையா இருந்தது இந்தக் கூட்டணிதான்.

சபேஷ் ஒரு பேட்டியில என்ன சொன்னாருன்னா, "ரஜினி சார் படங்களுக்குப் பின்னணி இசை என் வேலைதான்!"ன்னு சொல்லி இருக்காரு. ரஜினி சாரோட 'அண்ணாமலை, பாட்ஷா படங்களுக்குப் பின்னணி இசை அமைச்சது மட்டுமில்ல, இப்போ வரைக்கும் ரஜினி படங்கள்ல வர இன்ட்ரோ டைட்டில் மியூசிக், இவர் இசையமைச்சதுதான்னு சொல்றாரு!

நான்ஸ்டாப் உழைப்பு

தேவா உச்சத்தில இருந்தப்போ, வருஷத்துக்கு 23 படம் வரை வாய்ப்பு வந்துச்சாம்! அப்போல்லாம் சபேஷ் - முரளி ரெண்டு பேரும் ராத்திரி பகலா வேலை பார்த்து, இசைக் கோர்ப்புப் பணிகளைப் பார்த்துக்கிட்டாங்களாம். சபேஷோட இசையைத் தாண்டி, அவர் பாடின பாடல்கள் இருக்கே, அதெல்லாம் மறக்கவே முடியாதுங்க!

தமிழ் ரசிகர்கள் மத்தியில இன்றும் ரொம்ப ஃபேமஸா இருக்கிற 'உதயம் தியேட்டருல', 'கந்தன் இருக்குமிடம் கந்தகோட்டம்', 'கொத்தால்சாவடி லேடி', 'அண்ணாநகரு ஆண்டாளு', 'குன்றத்துல கோயிலு கட்டி' இந்தக் கானா பாடல்கள் எல்லாம் இவர் குரல்லதான் ஒலிச்சது. சபேஷ் குரல்ல வந்த 'காத்தடிக்குது காத்தடிக்குது' பாட்டு, 2000 தொடக்கத்துல எல்லா ஸ்பீக்கர்லயும் ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு.

Deva Sabesh

இசையமைப்பாளராகவும் சாதனை

சபேஷ் - முரளி தனி இசையமைப்பாளர்களா அறிமுகமானது சரத்குமார் நடிச்ச 'சமுத்திரம்' படத்துலதான். அந்தப் படத்துல வந்த 'அழகான சின்ன தேவதை', 'பைனாப்பிள் வண்ணத்தோடு' பாடல்கள்லாம் அப்போ சூப்பர் ஹிட்! அதற்கு பிறகு 'தவமாய் தவமிருந்து' படத்துல ராஜ்கிரண் தன் மகன்களுக்காகப் பாடுற பாட்டு, தீபாவளி அன்னைக்கு அவர் கஷ்டப்படுற காட்சியோட பின்னணி இசை இருக்கே, அது பார்வையாளர்களை நெகிழ வச்சிருக்கும்.

வடிவேலுவோட 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' வெற்றிக்குப் பின்னாலயும் இவங்க இசைதான் முக்கியம்!‌. இவங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைச்ச 'ஜோடி' படத்துக்கு பின்னணி இசை அமைச்சிருக்காங்க. ஜி.வி.பிரகாஷோட 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' படத்துக்கும் பின்னணி இசை இவங்கதான்!

30 ஆண்டுகளுக்கும் மேலா தமிழ் இசை உலகத்துக்குப் பங்களிப்பு செஞ்ச சபேஷ் மறைவு, தேவா குடும்பத்துக்கு மட்டுமில்ல, ரசிகர்கள் எல்லாருக்கும் பெரிய சோகம்தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+