கவிஞராக மாறிய மணிமேகலை.. இந்த மாதிரி தத்துவத்தை எதிர்பார்க்கலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் மணிமேகலையின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கெட்டப் மட்டும் போட்டால் போதாது அதற்கு தகுந்த வேலையும் செய்ய வேண்டும் என்று மணிமேகலை செய்த செயல் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

தனித்துவமான பேச்சுத்திறமை

தனித்துவமான பேச்சுத்திறமை

விஜய் டிவியின் செல்ல பிள்ளையாகவும், தொகுப்பாளராகவும் கலக்கி வரும் மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு போட்டியாளர்கள் புகழின் உச்சிக்கு சென்றது போலத்தான் மணிமேகலையும் தற்போது அனைவரையும் கவர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிமேகலை என்று சொன்னதும் சட்டென்று நினைவிற்கு வருவது அவருடைய பட பட பேச்சு தான். தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விதவிதமாக போடும் கெட்டப் பலருக்கும் பிடித்ததாக மாறி இருக்கிறது.

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த மற்றும் ரசிக்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. என்னதான் மன கவலைகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்த்தாலே மனம் லேசாகிவிடுகிறது என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. இதில் கோமாளிகளும், கணக்குகளும் சேர்ந்து செய்யும் செயல்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது .இதனால் தான் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன் முடிவடைந்தாலும் அடுத்தடுத்த சீசன் எப்போது தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

கலக்கும் விதவிதமான கெட்டப்

கலக்கும் விதவிதமான கெட்டப்

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனில் வழக்கமான கோமாளியாக மணிமேகலை கலந்து கொண்டிருக்கிறார். போன சீசனில் இவர் கலந்துகொண்டு இருந்தாலும் ஒரு சில எபிசோடுகள் உடல்நிலை பிரச்சினை காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்த மூன்றாவது சீசனில் அனைத்து எபிசோடுகளிலும் இதுவரைக்கும் தன்னுடைய அட்ராசிட்டி பெர்பாமன்ஸ் காட்டி வருகிறார். அதுவும் தற்போது இந்த வாரத்தில் இவருடைய கெட்டப் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது.

இது வேற லெவல் தத்துவம்

இது வேற லெவல் தத்துவம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்றாவது சீசனின் மூன்றாவது வாரத்தில் இருக்கும் நிலையில் மணிமேகலை கவிஞராக களமிறங்கியிருக்கிறார். வேஷம் போட்டு விட்டால் அதற்கு தகுந்த கவிதையும் சொல்ல வேண்டும் என்று நினைத்துவிட்டார் போல, அதனால்தான் தற்போது பேஸ்புக்கில் இவர் கவிதை என உதிர்த்து இருக்கும் காமெடி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது. அதில் காதலித்து பார் உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும். குக் வித் கோமாளி பார் உன்னை சுற்றி சந்தோசம் மட்டும் தோன்றம், என்று புதுவித தத்துவத்தை உதிர்த்து ரசிகர்கள் பலருடைய லைக்குகளை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+