சின்னத்திரையில் களமிறங்கும் மனோபாலா... அப்போ விஜய் டிவி களைகட்ட போகிறது
சென்னை: வெள்ளித்திரையில் கலக்கிய காமெடி நடிகர் இனி சின்னத்திரையில் தன்னுடைய காமெடியை காட்டத் தொடங்கி இருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்க இருக்கும் மனோ பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மூன்றாவது சீசன் தொடக்கம்
தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில், இந்த சீசன் எப்போது தொடங்கப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒருபக்கம் கொரானா அதிகரித்துக் கொண்டிருப்பதால் லாக்டோன் ஏற்பட்டு படப்பிடிப்பில் ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று ரசிகர்கள் ஒரு பக்கமாக புலம்பியும் வருகின்றனர். என்ன நடந்தாலும் இந்த முறை மூன்றாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யார் எல்லாம் இந்த மூன்றாவது சீசனில் கலந்து கொள்வார்கள் என்று பல செய்திகள் பரவி வருகிறது.

சின்னத்திரையில் அறிமுகம்
தான் பேசினால் தான் அடுத்தவர்கள் சிரிப்பார்கள் என்று இல்லாமல், தன்னுடைய உடல் அசைவுகள் மூலமாகவே சிரிக்க வைக்கும் ஒரு காமெடி நடிகர் தான் மனோபாலா. இவரை கலாய்த்து பல நடிகர்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில், இவர் என்றும் எளிமையான ஒரு நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் சின்னத்திரையில் சமீபகாலமாக அறிமுகம் ஆகி வருகிறார்.

செம்பருத்தி சீரியலில் அறிமுகம்
மனோபாலா ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் குணச்சித்திர வேடத்தில் அறிமுகமாகி இருந்தார். செம்பருத்தி சீரியலின் ஆதி மற்றும் பார்வதி திருமணம் ஆன புதிதில் அகிலாண்டேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறிய தருணத்தில் அவர்கள் மனோபாலாவின் வீட்டில்தான் வாடகைக்கு குடி இருந்தனர். அப்போது சீரியலில் ஏற்பட்ட சோக சீன்களில் கூட இவருடைய காமெடி சீரியலுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. செம்பருத்தி சீரியலுக்கு பிறகு இவர் எந்த சீரியலிலும் தலை காட்டவில்லை வெள்ளித்திரையில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

குக்காக அறிமுகம்
வெள்ளித்திரையில் இவர் பிஸியாக இருந்தாலும் தற்போது மீண்டும் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தன்னுடைய திறமைக்கு ஏற்ற இடத்தில் இவர் திறமையை காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் இவருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவருடைய பர்பாமன்ஸ் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு மேலும் சிறப்பு வாங்கிக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுவதாகவும் கூறி வருகின்றனர். இவர் ஒரு காமெடி நடிகராக இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் ஒரு குக்காக கலந்து கொள்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications