பைக்கில் வேகமாக சென்ற TTF வாசன்.. பின்னாடி இருந்து பயத்தில் அலறிய மௌன ராகம் ரவீணா!
விஜய் டிவி பிரபலமான ரவீணா TTF வாசனோடு பைக்கில் சென்ற வீடியோ ரசிகர்களின் மத்தியில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சென்னை: விஜய் டிவியில் மௌனராகம் சீரியல் கதாநாயகியாக இருக்கும் நடிகை ரவீணா டிடிஎஃப் வாசனோடு பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பைக்கில் பின்னாடி அமர்ந்தபடி டிடிஎஃப் வாசன் பைக் வேகத்தை பார்த்து ரவீணா அலறி இருக்கிறார்.
ஏற்கனவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் டி டி எஃப் வாசன் உடன் ரவீணா பைக்கில் சென்றதை குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.

குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகம்
ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் ரேஷ்மாவின் சகோதரியாக குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்த ரவீணா பிறகு திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த ராட்சசன் திரைப்படம் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இப்ப வரைக்கும் அந்த திரைப்படத்தில் குழந்தையாக இவர்தான் நடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரியாததாக தான் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் இன்பராஜ் வாத்தியார் இவரிடம் தப்பாக நடந்து கொள்வது போன்று ஒரு சீன் இருக்கும். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீசன் 2 சீரியலில் கதாநாயகியாக மாறி இருக்கிறார்.

குத் வித் கோமாளியில் அறிமுகம்
இந்த நிலையில் தற்போது குத் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் இவர் ஒரு கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரவீணாவை சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். அடிக்கடி தன்னுடைய ரீல்ஸ் வீடியோக்களையும் போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் இவர் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இவருடைய டான்ஸ் இளைஞர்களை வசியம் செய்யும் வகையாக இருக்கிறது என்று இவருக்கு இளைஞர்கள் கூட்டம் ஆதரவு அதிகமாக இருக்கிறது.

பைக் ரைட்
திரைப்படங்களில் கதாநாயகியாக இவர் எப்போது நடிப்பார் என்று அதிகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அதிகமாக சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு நபராக இருந்து வரும் டிடிஎஃப் வாசனோடு பைக்கில் ரவீணா ரைடு சென்று இருக்கிறார். அந்த வீடியோவை டிடிஎஃப் வாசன்வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களின் வேண்டுகோள்
இது பல இளைஞர்களை காண்டாக்கி இருக்கிறது. டிடிஎஃப் வாசனுக்கு என்று அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கும் நிலையில் தங்களுக்கு பிடித்த கனவு கன்னி டிடிஎஃப் வாசனோடு பைக்கில் பின்னாடி உட்கார்ந்து சென்றது பார்த்து சிலர் காண்டாகி இருக்கின்றனர். கமெண்ட்களில் தங்களுடைய வருத்தத்தை கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அந்த வீடியோவில் வேகமாக செல்லும் டிடிஎஃப் பைக்கை பார்த்து பயந்து போன ரவீணா அலரி கத்துவதை பார்த்து சிலர் இதை எங்களால் பார்க்க முடியவில்லை தயவு செய்து இதை டெலிட் செய்ய வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications