Coolie: லோகேஷ் கனகராஜ் அப்பாவிற்கும் ரஜினிகாந்துக்கும் இப்படி ஒரு பந்தமா? வெளிவந்த ரகசியம்! வியப்பில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசிய ஒரு விஷயம், ரஜினி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'கூலி' படத்தில் ரஜினிகாந்தின் பேட்ஜ் நம்பர் 1421-ன் ரகசியம் குறித்து லோகேஷ் பேசியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Coolie Rajinikanth Lokesh Kanagaraj

கண்டக்டர் அப்பாவுக்காகக் கொடுத்த பேட்ஜ் நம்பர்

'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பேட்ஜ் நம்பராக 1421 என்ற எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ரஜினி படங்களில், அவர் கூலியாக நடித்தால் 777 அல்லது 786 போன்ற எண்களையே பயன்படுத்துவது வழக்கம். இந்த எண்ணைப் பார்த்த ரஜினிகாந்த், ஒரு நாள் லோகேஷ் கனகராஜிடம், "ஏன் இந்தப் பேட்ஜ் நம்பர்?" என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு லோகேஷ், "அது என் அப்பாவின் கூலி நம்பர்," என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட ரஜினிகாந்த், "உங்க அப்பா என்ன பண்றார்?" என்று கேட்க, "எங்க அப்பா ஒரு பஸ் கண்டக்டர் சார்," என்று பதிலளித்துள்ளார் லோகேஷ். "இதை ஏன் நீங்க முன்பே என்னிடம் சொல்லவில்லை?" என்று ரஜினி ஆச்சரியத்துடன் கேட்க, "என்றாவது ஒருநாள் நீங்களாக வந்து கேட்பீங்க, அது மெமரியாக மாறிவிடும், அதனால் தான் இதுவரை சொல்லவில்லை," என்று லோகேஷ் கூறியுள்ளார்.

லோகேஷின் இந்த பதிலைக் கேட்டு ரஜினிகாந்த் மிகவும் பெருமைப்பட்டார். லோகேஷின் தந்தை ஒரு பஸ் கண்டக்டர் என்ற தகவலைக் கேட்டு, ரசிகர்கள் அனைவரும் லோகேஷைப் பாராட்டி வருகின்றனர். "லோகேஷ் வங்கியில் வேலை பார்த்தது தெரியும், ஆனால் அவரின் அப்பா ஒரு பஸ் கண்டக்டர்னு தெரியாது. சூப்பர்ணா," என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பஸ் கண்டக்டர் ரஜினி

லோகேஷ் சொன்ன இந்த விஷயம் ரஜினிகாந்திற்கு மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. ஏனெனில், ஒரு காலத்தில் பெங்களூருவில் பஸ் கண்டக்டராகப் பணிபுரிந்தவர்தான் ரஜினிகாந்த். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து, அவரது நண்பரும், பஸ் டிரைவருமான ராஜ் பகதூர், ரஜினியை ஊக்குவித்திருக்கிறார். ஆனால், ரஜினியின் காதலி அவருக்குத் தெரியாமல், மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் அவர் சார்பில் விண்ணப்பித்து, கட்டணத்தையும் கட்டிவிட்டார். அப்படித் தான் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து ரஜினிகாந்த் நடிகரானார்.

கூலி விழாவின் சுவாரஸ்யங்கள்

ஆமிர் கான்: கூலி' இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ஆமிர் கான், 'கூலி' படத்தில் தான் நடிக்கும் தாஹாவின் கெட்டப்பில், சட்டை அணியாமல் வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

டிக்கெட் முன்பதிவு: 'கூலி' படம், ரஜினிகாந்த் நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் வெளியாகும் ஒரு சிறப்புப் படமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படம், டிக்கெட் முன்பதிவில் அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூல் செய்து, புதிய சாதனை படைத்துள்ளது. இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் இந்தப் பேச்சு, 'கூலி' படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+