• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஷ்பு இட்லின்னா.. ரக்ஷாவுக்கு லட்டு கன்னம்.. உருகும் ரசிகர்கள்!

|

சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக மக்களால் பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்று சீரியல். அதிலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் நாயகி தேவிக்கு செம்ம ரசிகர் கூட்டம்.

டிவி சேனல்களை பொருத்தவரை அனைத்து சேனல்களும் போட்டிப் போட்டுக்கொண்டு வித்தியாச வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி கொண்டிருக்கிறது .அதில் சில குறிப்பிட்ட சீரியல்கள் பெயரை மாற்றி ஒரே கதையில் விதவிதமாக ஒளிபரப்புகின்றனர். இருந்தாலும் அந்த சீரியல்களுக்கும் பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்காங்க.

சில நடிகைகள் பெரிய திரையில் எவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சு வாங்குற பெயரை சில நடிகைகள் சின்னத்திரையிலேயே தன்னுடைய திறமையை நிரூபித்து வாங்கி விடுகிறார்கள். அப்படி மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட சீரியல்தான் நாம் இருவர் நமக்குஇருவர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ரக்ஷா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

வயசா முக்கியம்.. நெஞ்சைத் தொடும் குறும்படத்துடன்.. கலக்கும் ஸ்ரீபிரியாவயசா முக்கியம்.. நெஞ்சைத் தொடும் குறும்படத்துடன்.. கலக்கும் ஸ்ரீபிரியா

கன்னடத்து இளம் கிளி

கன்னடத்து இளம் கிளி

ஜனவரி 26 1991 இல் பெங்களூரில் இவர் பிறந்து இருக்கிறார். கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ரக்ஷா குழந்தைப் பருவத்திலிருந்தே நடிக்கணும் என்ற ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். ஆனால் அவருடைய குடும்பம் பாரம்பரியமிக்க விவசாயக் குடும்பம். படிப்பை முடித்த பிறகு 22 வயதில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் அவர் நன்றாக நடனம் ஆடுவார்.

இவர் பள்ளிகளில் படிக்கும் போது படிப்புக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம் எட்டாம் பொருத்தம் தானாம் . கிளாஸ் கட் அடிச்சிட்டு ஜாலியா சுத்திட்டிருப்பாராம். பார்ப்பதற்கு ரொம்பஅழகு என்பதால் அந்த வயசிலேயே நிறைய புரோபோசல் வந்திருக்காம். இவர் கன்னட பொண்ணாக இருந்தாலும் வடநாட்டு பொண்ணு போல அழகாக இருந்ததால் இவங்க கூட படிச்ச பசங்க எல்லாம் இவங்கள சைட் அடிச்சிகிட்டு தெருவுல நின்னுகிட்டு இவங்களோட பேரச்சொல்லி கத்துவாங்களாம். அந்தளவுக்கு நான் ஒரு கலக்கல் பிகர் என்று இவரே சொல்கிறார்.

முதலில் மாடலிங்

முதலில் மாடலிங்

ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த ரக்ஷா பிறகு கன்னட சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். புட்டின்டி பட்டு சேரா என்ற கன்னட சீரியல் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த சீரியலில் பிரபல நடிகர்களான ஸ்ரீதிவ்யா, யாமினி பாஸ்கர், ராமாயணம் கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர் அதன்பிறகு தமிழ் சீரியலில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்திருக்கிறார், இருப்பினும் ஏற்கனவே ரக்ஷாவுக்கு சென்னையில் சில நண்பர்கள் இருந்தார்கள் அவர்கள் துணையுடன் தான் சீரியல்களில் காலடி எடுத்து வைத்தார்.

மாயனின் ஜோடி

மாயனின் ஜோடி

வம்சம், தமிழ் கடவுள் முருகன் ஆகிய தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார், இந்த சீரியலுக்கு பிறகுதான் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிக்க ஆரம்பித்தார், அந்த சீரியல் மார்ச் 26 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது .காதல் கல்யாணம் கொண்ட ஒரு கலகலப்பான குடும்ப கதை பின்னணியைக் கொண்ட மகா தொடராகும். இந்த சீரியலில் செந்தில்குமார் இரட்டை கதாநாயகனாகவும் அவருக்கு இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பார்கள். அதில் ரக்ஷா தேவி யாக நடித்திருப்பார்.

 கலக்கல் தேவி

கலக்கல் தேவி

இந்த சீரியலில் மாயன் தேவி கேரக்டர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும். இருவருக்குமிடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. தேவியின் குழந்தைத்தனமான பேச்சும் அவருடைய முட்டைக்கண்ணும் ரசிகர்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. அதன் பிறகு குழந்தை பருவ நண்பரான ராகேஷ் சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உணவுப் பிரியரான இவருக்கு சிக்கன் என்றால் கொள்ளை பிரியமாம். நடிகை குஷ்புவின் தீவிர விசிறியான இவர் விஜய்யின் வெறித்தனமான ரசிகையும் கூட. குஷ்பு இட்லின்னா ரக்ஷா லட்டு கன்னம்னு ரசிகர்கள் கொஞ்சிக் குலாவி ரசிக்கிறார்களாம்.

English summary
Naam Iruvar Namakku Iruvar TV serial fame Raksha Holla has more fans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X